அறியாத பருவத்தில்
தெரியாத காலத்தில்
அன்புநெறி மட்டுமே
புரிகின்ற நெறியாம்!
அறிவுசற்று முதிர்ந்து
ஆளுமை பிறந்ததும்
அன்பினை ஒரெட்டு
தள்ளியே வைக்கிறோம்!
அன்பையே அறனா
யுடைத்ததோர் இல்வாழ்க்கை
பண்புடைத் தாகுமென்
றறிவதே நன்மை!
என்பும் உரியது
பிறர்க்கென் றெண்ணும்
பண்புடைத் தன்றோ
நல்மனத் திண்மை !
----கி.பாலாஜி
21.07.2017
காலை 10.30
இப்படைப்பு கவிஞர் பாலாஜி அவர்களின் படைப்பாகும்.
தெரியாத காலத்தில்
அன்புநெறி மட்டுமே
புரிகின்ற நெறியாம்!
அறிவுசற்று முதிர்ந்து
ஆளுமை பிறந்ததும்
அன்பினை ஒரெட்டு
தள்ளியே வைக்கிறோம்!
அன்பையே அறனா
யுடைத்ததோர் இல்வாழ்க்கை
பண்புடைத் தாகுமென்
றறிவதே நன்மை!
என்பும் உரியது
பிறர்க்கென் றெண்ணும்
பண்புடைத் தன்றோ
நல்மனத் திண்மை !
----கி.பாலாஜி
21.07.2017
காலை 10.30
இப்படைப்பு கவிஞர் பாலாஜி அவர்களின் படைப்பாகும்.
No comments:
Post a Comment