Friday 4 August 2017

வஞ்சிப் பாட்டு

இந்த வஞ்சித்தான்
தருவாள் கஞ்சித்தான்
உனை கொஞ்சித்தான்
மிஞ்சித்தான்
சுவைத்தான்
ரசித்தான்
ருசித்தான்
தமிழ் பா வடித்தான்

அணைத்திட துடித்தான்,
அவள் விழியில் மயங்கித்தான்,
மலைத்தான், அழைத்தான்
அணைத்தான், ரசித்தான்.
ருசித்தான்

இறுதியில் கலைத்தான்...
அவள் கலை தான்....

காத்திடத்தான்
அத்தான்!

உழைத்தான், பிழைத்தான்
பிழை தான் பொறுத்தான்,
சுகமதை வெறுத்தான்,
இணையவளை நினைத்தான்,
ஓடியோடித்தான்
பணம்தான் சேர்த்தான்..



நங்கையவள் நாணித்தான்
அவளை மயக்கத்தான்,
அறிந்தான் புது
பாணிதான்...

வீழ்ந்தவன் எழுவான்!
வில்போல் பாய்வான்!
தீமையை துளைப்பான்!
சினமதை வெறுப்பான்!
தமிழ்பா படிப்பான்!
கோலெடுத்து வடிப்பான்!
பாவினில் வெறுப்பான், துடிப்பான்,
சினப்பான், கனப்பான்..
என்றேதான் பொங்கிடுவான்....

கவிழ்ந்தான் கனிந்தான்,
கனி தான் சுவைத்தான்,
சுமைதான் பயந்தான்,
சுகந்தான் நினைந்தான்

தொடர்ந்தான் கவிதான்
வடித்தான் கவி தான்...

அவன்தான் உறவைத்தான்
துறந்தான் இன்று
இணையத்தை மணந்தான்
இதயத்தை மறந்தான்,
கணிணிவழி பறந்தான்
காதல்தான் குறும் செய்தித்தான்
படைத்தான் காகித பூக்கள்தான்...

தடந்தான் மாறித்தான்
கவிதான் மறந்தான்
பிறழ்ந்தான்,நிலைத்தான்
இணைத்திட பறந்தேன்
நான்தான் அழைத்தேன்
தொடரந்திடு கவிதான்...
இரவில்தான் வணக்கந்தான்
சொல்லித்தான் முடித்தான்
சிறு பிள்ளைத்தான்
இது பிள்ளைத்தமிழ்தான்
படைத்திடு புது கவிதான்
விடிந்திட தவித்தான்,
விழித்தான்
கவி புனைந்தான் அழைத்தான் உடன்வர
தமிழ்தான்....


இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.⁠


No comments:

Post a Comment

Popular Posts