அவுஸ்திரேலிய அணியின் இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இருபது-20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான கிண்ணத்தைத் தீர்மானிக்கும் போட்டி இன்று (அக் 13) இரவு 7 மணிக்கு இடம்பெறவிருந்தது. இடைவிடாத மழை காரணமாக இரவு 8.20 மணிக்கு முடிவு இன்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இத்தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளில் வென்றுள்ளன. இப்போட்டி கைவிடப்பட்ட நிலையில் தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
தொடர்ந்து இந்தியா எதிர் நியூசிலாந்து கிரிக்கெட் தொடரும் அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து தொடரும் இடம்பெறவுள்ளன.
#SigaramSports #INDvsAUS #T20I #AUStourOfIndia #INDIA #AUSTRALIA
No comments:
Post a Comment