Sunday, 15 October 2017

பிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா?

2017.07.15 ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒன்று கூடும் 'பிக்பாஸ் கொண்டாட்டம்' நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஒருயுகம் போல நகர்ந்தது பிக்பாஸின் ஒவ்வொரு நாட்களும் நமக்கு. பிக்பாஸ் முடிந்ததும் ஒரு யுகம் கூட ஒரு நாளைப் போல கழிந்து கொண்டிருக்கிறது.



இன்னமும் பிக்பாஸ் போட்டியாளர்களைப் பற்றியும் நிகழ்ச்சியைப் பற்றியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் நாம். பிக்பாஸ் வீட்டை நம் வீடாகவும் நம் அயல் வீடாகவும் நினைத்து வந்தோம்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் தனித்தனியே பொது நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்குபற்றி வந்தாலும் அனைவரும் ஒன்று கூடும் முதல் நிகழ்ச்சியாக இந்த 'பிக்பாஸ் கொண்டாட்டம்' நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. நிகழ்ச்சி முன்னோட்டம் மற்றும் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கும் ஒளிப்படங்கள் வாயிலாக குதூகலமான ஒரு சந்திப்பாக இந்த நிகழ்ச்சி அமையுமென எதிர்பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் ஓவியா பங்குபற்றுவதை காணவே பலரும் ஆவல் கொண்டிருக்கின்றனர். மேலும் நிகழ்ச்சி முன்னோட்டத்தில் ஓவியாவும் ஆரவ்வும் மேடையில் உரையாடும் காட்சி காணப்படுகிறது. அது என்ன உரையாடலாக இருக்கும் என பலரும் ஆவலாக உள்ளனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களைக் காண விஜய் தொலைக்காட்சி நேயர்கள் மதியம் மூன்று மணிக்காகக் காத்திருக்கின்றனர். சந்திப்பு குறித்த விவரங்களோடு மீண்டும் சந்திப்போம்!

#BBTamil #BiggBossTamil #BiggBoss #BiggBossTamil1 #BiggBossReUnion #Oviya #OviyaArmy #VijayTV #VijayTelivision #Julie #JimikkiKammal


No comments:

Post a Comment

Popular Posts