புதுவிதமான எண்ணங்கள்
பலவித சிந்தனைகள்
பல முரண்கள்
பற்றியிருக்கும் புள்ளி நட்பு
அழுகையில் தொடங்கும்
ஆரம்பப் பள்ளி நட்பு
கள்ளங்கபடங்கள் இல்லாத
கவிதை போன்றது
இந்த நட்பு
பாலினம் உணராத
பால்யகால நட்பு
காதல் உருவாகும்
கல்லூரிக் கால நட்பு
காலம் கடந்தும்
கலையாத நட்பு
நுனிப் புல்லாய்
நிறம் மாறும் சில நட்பு
ஆணிவேராய் நம்முள்
பதிந்திட்ட நட்பு
அந்தரங்கம் பகிரும்
ஆழ்கடல் சங்காய் நட்பு
திசைமாறி திரியும்பொழுது
கலங்கரைவிளக்காகும் நட்பு
முகநூல் இணைக்கும்
முகமறியா நட்பு
வரைமுறைகள் இல்லாமல்
வட்டத்திற்குள் சிக்காத
அன்பான ஆழமான நட்பு
அனைத்துமற்று நிற்கையில்
அன்னையாய் தோள்
கொடுக்கும் நட்பு
தன் திறனை
நமக்கு உணர்த்தும்
குருவாய் நட்பு
நட்பு இதுவே
நம்மை நமக்குணர்த்தும்
நிகழ்காலக் கண்ணாடி
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன் நண்பர்கள் தின சிறப்புக் கவிதையை உங்களுக்கு வழங்கியவர் கவிஞர் சதீஷ் விவேகா!
பலவித சிந்தனைகள்
பல முரண்கள்
பற்றியிருக்கும் புள்ளி நட்பு
அழுகையில் தொடங்கும்
ஆரம்பப் பள்ளி நட்பு
கள்ளங்கபடங்கள் இல்லாத
கவிதை போன்றது
இந்த நட்பு
பாலினம் உணராத
பால்யகால நட்பு
காதல் உருவாகும்
கல்லூரிக் கால நட்பு
காலம் கடந்தும்
கலையாத நட்பு
நுனிப் புல்லாய்
நிறம் மாறும் சில நட்பு
ஆணிவேராய் நம்முள்
பதிந்திட்ட நட்பு
அந்தரங்கம் பகிரும்
ஆழ்கடல் சங்காய் நட்பு
திசைமாறி திரியும்பொழுது
கலங்கரைவிளக்காகும் நட்பு
முகநூல் இணைக்கும்
முகமறியா நட்பு
வரைமுறைகள் இல்லாமல்
வட்டத்திற்குள் சிக்காத
அன்பான ஆழமான நட்பு
அனைத்துமற்று நிற்கையில்
அன்னையாய் தோள்
கொடுக்கும் நட்பு
தன் திறனை
நமக்கு உணர்த்தும்
குருவாய் நட்பு
நட்பு இதுவே
நம்மை நமக்குணர்த்தும்
நிகழ்காலக் கண்ணாடி
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன் நண்பர்கள் தின சிறப்புக் கவிதையை உங்களுக்கு வழங்கியவர் கவிஞர் சதீஷ் விவேகா!
No comments:
Post a Comment