அருமை
வளநாடே !
ஆற்றல்சார்
அருமைந்தர் வாழ்ந்திருந்த
அருமை
வளநாடே ! உன்
அழகனைத்தும்
இன்றேனோ
அடகு
வைக்கப் பட்டனவே !
சுதந்திரமாய்
தொழில் புரிந்து
சோம்பலின்றி
வாழ்ந்திருந்த
மக்களெங்கே ?
மலைபோன்ற
மனங்களிங்கு
ஏனின்று
மடுவாகி
மாற்றுருக்
கொண்டனவோ ?
ஆத்திரங்களின்றி
அழகாய்
தொழில் புரிந்த நின்மக்கள்,
அதிகார
வர்க்கத்தின்
அடக்குமுறை
ஆட்சிக்கு அடிபணிந்து,
ஏனின்று,
‘அடிமைச்
சிறுமதியில்’
அல்லல்
படவேண்டும் ?
பொன்
கொழித்து வந்தவுந்தன் மடியினிலே
ஏனின்று
மண்கூடத்
தன் மமதையிழந்து நிற்கிறது ?
நாளின்
நிழலுருவை
நாளும்
காட்டிவந்த
நல்லாற்றுக்
கின்றிங்கே அழகில்லை !
பாலைவனம்
போலே
பாழாகி
விட்ட உன் நிலத்தினிலே
பல்வேறு
விதமான
ஏக்கக்
குரல்களின் எதிரொலிகள் !
நெல்
வளர்ந்து நீர்கட்டி
நின்ற விடமெல்லாம்
கோரைப்
புல்வெளியாய்
மாறிவிட்ட படியாலோ
பாவம்
உன்மக்கள்
படியிறங்கிச்
செல்கின்றார் ?
தனிப்பட்டோர்
கரத்தினிலே
தனம்
சேர்ந்த காரணத்தால்,
தாழ்வுற்ற
நின்மக்கள்
தளர்வுற்றுத்
தவிக்கின்றார் !
’இளவரசு’
வல்லரசாய் மாறும்!
பின்
மறையும் ! – எனில்
இத்தகைய
உழைப்பாளர்
கூட்டம் இனி
உருவாக
முடியாது !
பதவியிலே
பற்றற்று மக்கள்
வாழ்ந்திருந்த
காலமொன்று உண்டு !
உழைப்புக்
கேற்றதொரு
ஊதியம்
கைக்கொண்டு
உண்மைக்குப்
புறம்பின்றி
வாழ்ந்திருந்தான்
மனிதன் !
அன்று
ஆசையில்லை – அதனால்
அழிவும்
இல்லை !
அன்று
அறியாமை
நிலைத்தாலும்
ஆரோக்கியம்
துணையுண்டு !
அளவற்ற
பொருளில்லை !
ஆனாலும்
மனம்
வளம்கண்டு
வாழ்வாங்கு
வாழ்ந்ததனால்
வளர்ச்சி
யுண்டு !
காலம்
மாறியது !
காசுபணம்
சேர்ப்பதிலே
கருத்தும்
கூடியது !
வியாபாரம்
பெருகியதால்
‘வேண்டாமை’
யென்றொன்றி
வேண்டும்
பொருளனைத்தும்
விளைவித்து
வினையுற்றான்
மனிதன் !
தேவைகள்
பெருகியது !
தேடும்
வழிகளதன் தன்மையதோ
குறுகியது
!
ஆடம்பரம்
சேர
அன்புவழி
மாறியது !
அருமை
வளநாடே !
இனிய
பொழுதனைத்தும்
இத்தலத்தில்
எமக்களித்த தாயே !
இன்று
இது என்ன
கொடுமை ?
பசுமை
நிறைந்திருந்த பாதையெலாம்
பாழ்வெளியாய்
மாறிவிட்ட பாதகமேன் ?
கடமைவழி
சென்றேன் !
காலம் பல
கடந்து,
கனவு நிறை
வேறுமெனக்
கால்கள்
இழுத்த வழியிங்கு வந்தேன் !
அந்தோ !–
என்
கனவுகள் அனைத்துமே
களவுபோய்
விட்டனவே !
இலவைக்
காத்திருந்த
இந்தக்
கிளிகாண – இன்னும்
என்னென்ன
காட்சிகள்
இங்குண்டோ ?
கவலைத்
தோட்டத்தில்
கடவுள்
எனக்களித்த
கனிகள் பல
உண்டேன் !
தொல்லை
தரும்காலம் !
துவண்டு
மனம் வேகும் !
மனம்
வெந்த போதெல்லாம்
சொந்த
நாடதனின்
சொர்க்க
நினைவுகளில்
சுகங்கள்
கண்டுவந்தேன் !
இன்று,
வெந்த
புண்ணதனில்
வேல்பாய்ச்சி
விட்டாயே !
வேட்டையாடும்
வீணர்கள்
விரட்டுகின்ற
முயலொன்று
வீழ்ந்திறக்கும்
வேளையிலே
வீடடையும்
நிலைபோலே,
அனுபவத்தின்
அளப்பறிய பாடங்களை
அருமைச்
சோதரர்க்கு அளிக்க எண்ணி
ஆய்ந்தோய்ந்த
காலத்தில்
ஓடி
வந்தேன் !
கடற்கரையின்
ஈரமணலில்
கால்
வரைந்த ஓவியமாய்,
கலைந்து
விட்டனவே கனவுகள் !
வாழ்வில்
நான் கண்டுவிட்ட
வசந்தங்கள்
எத்தனை !!
வசந்தங்கள்
மாறி
வாடைவந்
தடைகையிலே
வாழ்வின்
பயன்காண
வளநாட்டை
நாடிவந்தேன் !
கடமைகள்
முடிகையில்தான்
கடன்பட்ட
நெஞ்சுக்கோர் சாந்தி !
சொந்த
நிலத்தினிலே
உழைத்துவந்த
உன் மைந்தன்
சோர்வைக்
கண்டதில்லை !
வாழ்க்கை
அவனுக்கு
என்றும்
வசந்தம்தான் !
அதிகார
விரட்டலுக்கு
அடிபணியும்
நிலை
அவனென்றும்
அறியாதது !
அனைத்து
வழிகளுமே
அவனது
வழிகள்தான் !
ஆக்கவும்
அவனேதான் !
அழிக்கவும்
அவனேதான் !
சொர்க்கங்கள்
சொந்தக்
கையாலே
உருவாகும் !
இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
கனவுகள் தொடரும்....
No comments:
Post a Comment