Sunday 13 August 2017

மனதிலுறுதி வேண்டும்

அறிமுகமில்லா பலமுகங்கள்
அழுகையில் அறிமுகமானது...
பொய்யில்லை ... புறமில்லை...
மெய்யான நட்பு பூத்ததுவே...

வாழ்வின் தொடக்கத்தில்
வளர்ந்ததுவே அழகாய்..
முதல் மதிப்பெண்...
முதல் வரிசை...

அனைத்திலும் முதன்மையாய்
என் பள்ளி நாட்களில்...
தோல்வி அறியவில்லை...
துவண்டு விழுந்ததில்லை...

இளமையின் இன்பத்தில்
இளங்கலை முடித்து
வேலை தேடி வெளிவருகையில்
வெளியுலகம் விளங்கியதே...

முதுகில் குத்தும் நட்பு...
பணத்தைப் பார்க்கும் உறவுகள்...
இருக்கும் வரையுடனிருந்து
கரைந்ததும் கலையும் பச்சோந்திகள்...








காலத்தின் கோலம்
காலனின் பாணத்தில்
வீழ்ந்தவன் பரிதவிக்கிறேன்...
விழுந்தும் துடிக்கிறேன்...

மனதின் வலி கூடி
மயங்கி விழுந்தவன்
எழும் முன்
அடுத்த அடி...

மனமும் மரத்துப் போனதே...
கனமும் இளைத்துப் போனதே...
காலம் கற்பித்துச் சென்றது
மனதிலுறுதி வேண்டுமென்று...

தோல்வியில் கற்றேன்
துவண்டதும் எழும் பாடத்தை...
விழுந்ததும் எழுகையில் உணர்ந்தேன்
என் மனதின் வலிமையை...

                                     
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts