Friday 18 August 2017

ஆதவன்

இரவு பெய்த மழையில்
இன்பமுடன் நீராட மறந்து
எங்கு சென்றான் ஆதவன்...

அதிகாலை வேளையில் அனல்
தெறிக்கும் கதிர் விரித்து
எனைச் சுடவே வந்துவிட்டான்...

இரவு நீ வந்திருந்தால்
இன்பமாக கதிர்விரித்து
இச்சை தீருமட்டும் குளித்திடலாம்-அன்றி



மழை மீது கோபமென்றால்
அவனை சுட்டெறிக்க ஆண்மை
யுண்டோ அதைவிடுத்து

எனைவருத்தி காட்டுவதில்
இன்ப மென்ன கண்டுவிட்டாய்
என்னுடல் நீரை உறிஞ்சிடவே....

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.⁠⁠

No comments:

Post a Comment

Popular Posts