Tuesday 31 October 2017

நிலாபாரதி கவிதைகள்

01 
ஆறுதலுக்காகத்தான் தோள்சாய்கிறேன்! 
ஆதாயத்திற்கென நினைத்துக்கொள்கிறது
இந்த உலகம்!

02
பைத்தியமாவதைவிட,
பேரானந்தம் 
வேறென்ன இருந்துவிடப்போகிறது ?


03
நிராசையின்
கனவுகளை தின்று 
செரித்துவிடு மனமே!


04
ஒப்பனைகள் என்றறிந்தபின்னும் உதிர்க்கும் 
உன்வார்த்தைகளுக்கு நேசம் என்றுதான் 
பெயரிட்டுக்கொள்கிறேன் ...  




05
மன்னித்ததாய் சொல்லி 
மருந்திட்ட நீதான், 
மறக்காமல் 
ரணப்படுத்தியும் போனாய் மற(று)க்கமுடியா வார்த்தைகளால் ...!


06
வார்த்தைகளாலே உருவக்குத்தி,
ஒன்றும் செய்யாததுபோல் கடந்துபோகும் கத்திமனம் 
எப்படி வாய்த்திருக்கும் 
உனக்கு மட்டும்?


07
இப்படித்தான் என்று கணித்துவிட்டு
நீ கத்தித்தொலைக்கும்போதுதான், 
நானும் அப்படியே இருந்துவிடலாமென்று 

அசாத்திய வைராக்கியம் தோன்றிவிடுகிறது!   

இக்குறுங்கவிதைகள் கவிஞர் நிலாபாரதி புவனா அவர்களால் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட படைப்புகள் ஆகும். 

நிலாபாரதி கவிதைகள்  - நிலாபாரதி - #NILABHARATHI       
 

Monday 30 October 2017

பதினேழு வகையான மூடர்கள்

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.

2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.

3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.

4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.

5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.




6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்ப‍வன்.

7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.

8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.

9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.

10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.

11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.

12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.

13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.

14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.

15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.

16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.

17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.

ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.

மகாபாரதத்தில் கௌரவ, பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார்.

-படித்ததில் பிடித்தது. அகரம் பார்த்திபன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் ஊடாக பகிர்ந்து கொண்டார்-

பதினேழு வகையான மூடர்கள் - அகரம் பார்த்திபன் 
 

Saturday 28 October 2017

ஒரு பட்டிக்காடு...

ஊர்
💚
எங்களூர் சிறிய பட்டிக்காடு
அங்கு பெரிதாய் என்ன இருந்தது
அதன் மருங்குகளில்
கடவுளின் கண்களைப் போல்
இரு நதிகள் ஓடின
பௌர்ணமி பொழியுமதன் அலைகளில்
கெண்டைமீன்கள் நீந்திக் களித்தன
ஊரின் எல்லையிலொரு தாமரைக்குளம்
கரையில் திரௌபதி அருள் செய்தாள்
முன்னிரவில் படித்துறைகளிலிருந்து
காற்றிலெழும்பி வந்தது பெண்டிர் சிரிப்பொலி



அய்யனார் கோவில் சுற்றி புளியந்தோப்பு
ஈரம் விளைந்த அதன் நிலத்தில்
ஓட்டுச் சில்லுகளால் கோடுகள் கீறி
இலுப்பை விதைகள் சேகரித்து
நொண்டி விளையாடுவர் சிறுவர்
முதிர்ந்த வன்னி மரத்தடியில்
எம்மூதாதை வீரனெழுந்த தலமுண்டு
அவன் காவலில் எம்குலம் தழைத்தது
கேழ்வரகும் கம்பும் சோளமும் கவர வரும்
சிட்டுகளை விரட்ட எழுப்பிய ஒலியில்
விலகியது எங்கள் கருக்கல்
ஒன்றாம் வகுப்பு ஆசானோ ஒன்று விட்ட அத்தையோ ஆசை மேலுற எங்கள் குஞ்சுமணிகளை உருவி முத்தமிடுவார்கள்
கமர்கட் வாங்கிக் கொடுத்து
தூது போகச் சொன்ன சிறுவர்கள்
மொழியும் முறைப்பெண்கள் வார்த்தைகளில்
இரவெல்லாம் கனவு வளர்ந்தது
பாட்டன் பாட்டி பெரியப்பன் பெரியம்மா
சித்தப்பன் சின்னாயி மாமன் அத்தை
சொந்தம் சோலியென
பொழுதெல்லாம் நிறைந்தது
விழியில் பீளையும் மூக்கில் சளியும்
அழகுசெய்யும் கோவிந்தனுக்கும்
செல்வி அக்காவுக்கும்
திருஷ்டி கழிக்கும் அம்மாக்களிருந்தனர்
அங்குதான் மாடுகளை மேய்த்தபடி
ஒரு சிறுவன் தாஸ்தாயேவ்ஸ்கியின்
வெண்ணிற இரவுகளைப் படித்தான்
பிறகு தனது நாஸ்தென்காவோடு
அக்கிராமத்தை விட்டு வெளியேறினான்
தன் பூர்வநிலத்தை அறிய மகன் விழையும்போது சொன்னான்
எங்களூர் ஒரு பட்டிக்காடு
அங்கு பெரிதாய் என்ன இருந்ததென
பிறகு அவனறியாமல்
கைக்குட்டையெடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டான்.
#என்னாளும் அழியாத மாகவிதை!

இக்கவிதை கவிஞர் கரிகாலன் அவர்களால் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கவிதை ஆகும். 

ஒரு பட்டிக்காடு... - கரிகாலன் 
 

பேறுகாலம் (18+)

'அடுத்தமுற படுக்க வரட்டும்
மொறத்துலயே அடிக்கிறேன்'
வலி தாளாது
வசை பாடினாள் வள்ளி
'மொத புள்ளைக்கும் இதையே தான் சொன்ன
மூடுடி வாய'
பிரசவம் பார்க்கும்
பெரியக்கா கிழவி சீண்டினாள்


'இது மூணும் போதும்'
திண்ணையிலிருந்து
முனகிக் கொண்டான் முத்தப்பன்
மூன்றுநாட்கள் கடந்த பின்பு
ஆம்படையான்
முக வாட்டம் கண்ட வள்ளி
'புண்ணு ஆறட்டும் பொறுத்துக்க மாமா'
'அது கெடக்குது; ஆயுசுக்கும் காத்திருப்பேன்'
வகிட்டிலொரு முத்தமிட்டான் முத்தப்பன்
அத்தனையையும் மாத்திடுச்சே
அறுத்தெடுக்கும் மருத்துவம்
*
(மீள்: 15/05/2016)

இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

பேறுகாலம் - கோபால் கண்ணன் 

மல்லிகைக்கிழமை

*********************
‘வரும்போது
கால் கிலோ மல்லிகை மொக்கு
வாங்கிட்டு வந்துருங்க' -
அந்திக்குள் வீடு திரும்ப
வேண்டியதன் அவசியத்தை
புறப்படும்போதே பூடகமாகப்
புகுத்திடுவாய் மனத்திற்குள்




மாலை உன் கூந்தலேற
பகலெல்லாம் ‘போது’ஆகும்
மல்லிகையைப்போல்
நாளெல்லாம் நம்மிடையே இவ்
வெள்ளிக்கிழமை மெருகேறும்

மாரியம்மன் கோவில் அருகில்
கடைவிரித்துக் காத்திருப்பாள் பூக்காரி
நரைக்கூந்தல் திருநீற்று நெற்றி
வெள்ளுடை உடுத்தி
வெண்பளிங்கு அம்மன்சிலை போன்று
அமர்ந்து பூ தொடுப்பாள்
பூக்காரி என்றுதான் பொதுவாக அழைப்பர்
நான் பூவம்மா என்றழைப்பேன்

கொடிமல்லிப் பூ வளர்ப்பு
குறைந்துவிட்ட காரணத்தால்
முன்பணம் செலுத்திச் சொல்லி வைப்பேன்

அலுவல் முடித்துத் திரும்புகையில்
பூவுடன் சேர்த்து புன்னகையையும்
பொட்டலமாகக் கட்டிக்கொடுப்பாள்

இரை சேகரித்த தாய்க்குருவிபோல்
விரைந்து வீடடைவேன்
வெட்கத்துடன் பொட்டலம் பிரிப்பாய்

மொக்குகளைத் தரையில் கொட்டி
நூற்கண்டு பிரித்து பூ கட்டத்துவங்குவாய்
எதிரில் அமர்ந்து நான்
இரண்டிரண்டாக எடுத்துப் பிடித்துக்
கொடுக்கக் கொடுக்க
வாங்கி வாங்கி சரம் தொடுப்பாய்

எடுத்துக் கொடுக்கும் விரல் இரண்டும்
என்னுதடுகள்
பிடித்து வாங்கும் விரல் இரண்டும்
உன்னுதடுகள்
அவை நான்கும் பரிமாறிக்கொள்ளும்
மலர் முத்தங்கள்

முத்தச்சரந்தொடுத்தல் முடிந்ததும்
குளித்து வந்து கூந்தல் ஏற்றுவாய்
அதுவரை அடைத்து வைத்திருந்த 
வாசத்தையெல்லாம்
உன் கூந்தலுக்குக் கடத்தியபடி
என்னைப்பார்த்து பழிப்புக்காட்டிச் சிரிக்கும்

என் காத்திருப்பைக் கண்டு
இதோ
அழைத்து வந்துக்கொண்டிருக்கிறேன் 
இரவை
எனக் கட்டியங்கூறி
அந்தி வானம் சிவக்கும்
அங்கம் மெல்ல பூக்கும்
*

இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

மல்லிகைக்கிழமை

Friday 27 October 2017

கீதையும் அர்ஜுனனின் சந்தேகமும்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான் அர்ஜுனன். அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? 'ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.




ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட. பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்?' அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.

'அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.

ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல, மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய். அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம்? தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம்.' அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

-படித்ததில் பிடித்தது. அகரம் பார்த்திபன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் ஊடாக பகிர்ந்து கொண்டார்-

Tuesday 24 October 2017

உடைந்த கண்ணாடி



உடைந்து விட்ட கண்ணாடியில்
 உள்ளத்தின் பிரதிபலிப்புகள்;
 பகுதி பகுதியாகப்
 பயணம் செய்து
 மனதில்
 பிரளய அலைகளை
 உண்டாக்கும்;
 அவை
 விரைவில் அடங்காத
 பேரலைகள்!

 மூழ்கி விட்டால்
 முக்தி இல்லை!

 விலகி நிற்பதே
 விவேகம் !


--கி.பாலாஜி
21.02.2016

உடைந்த கண்ணாடி

Sunday 22 October 2017

இந்தியா எ நியூசிலாந்து : 1வது ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி இன்று (22) இடம்பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. போட்டி விவரங்கள் உங்களுக்காக இதோ:

INDIA BATTING

R.G. Sharma - b Boult - 20

S. Dhawan - c Latham b Boult - 9

V. Kohli - (c) c Boult b Southee - 121

K.M. Jadhav - c&b Santner - 12

D.K. Karthik - c Munro b Southee - 37

M.S. Dhoni - c Guptill b Boult - 25

H.H. Pandya - c Williamson b Boult - 16

B. Kumar - c Nicholls b Southee - 26

K. Yadav - Not out - 0


Extras 1 4lb 14

Total 50.0 Overs, 8 wkts 280

To Bat: K. Yadav, J.J. Bumrah Y.S. Chahal





NEW ZEALAND BATTING

M.J. Guptill - c Karthik b Pandya - 32

C. Munro - c Karthik b Bumrah - 28

K.S. Williamson - (c) c Jadhav b Yadav - 6

L.R.P.L. Taylor - c Chahal b Kumar - 95

T.W.M. Latham - Not out - 103

H.M. Nicholls - Not out - 4

Extras 5w, 11lb 16

Total 49.0 Overs, 4 wkts 284

To Bat: C. de Grandhomme, M.J. Santner, A.F. Milne, T.G. Southee, T.A. Boult


MATCH SUMMARY :

IND 280/8 (50.0 Ovs)

NZ 284/4 (49.0 Ovs)

New Zealand won by 6 wkts



ஐ எனும் ஐ!

தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் 'ஐ' என்ற எழுத்து ஒரு காலத்தில் 'ஐ' என்ற சொல்லாகத் தனித்து நின்று பெரியவர்கள், அண்ணன், தெய்வங்கள், தலைவன் போன்ற பொருட்களைத் தந்திருக்கின்றது. ஆனால் இன்றைய தமிழில் அது ஒரு எழுத்தாக மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. அதற்குத் தனிப்பட்ட பொருள் இன்று கிடையாது. அது வேற்றுமை உருபு ஆவது வேறு செய்தி.



முதல் நாள் போரிலே அண்ணனை இழந்து மறுநாள் போரிலே கணவனை இழந்த பெண்ணொருத்தி மீண்டும் இன்று போர்ப்பறை கேட்க மகிழ்ந்து தன் மகனையும் வேல் கொடுத்துக் களத்துக்கு அனுப்பிய கதையைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

அதிலே 
'மேனாள் உற்ற செருவில் இவள் தன் ஐ யானை எறிந்து களத்து ஒழிந்தனனே (புறநானூறு 297)' 
என்ற அடிகள் வரும். முன்பு நடந்த போரிலே யானையை வேலால் எறிந்து கொன்று விட்டு தானும் இறந்து போனான் இவள் அண்ணன் என்பது இந்தச் சங்கச் செய்யுள் அடிகளின் பொருளாகும். இங்கே ஐ என்பது அண்ணன் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது.

திருக்குறள் படைச் செருக்கு அதிகாரத்திலே
'என் ஐ முன் நில்லன்மின் பகைவீர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்' 
என்று ஒரு குறள் காணப்படுகின்றது. முன்பு என் தலைவன் முன்னே போர் செய்யவந்து இறந்து இன்று கல்லறையில் கிடப்பவர் பலர். அதனால் பகைவர்களே என் தலைவன் முன் நிற்காமல் அகன்று விடுங்கள் என்பது இதன் பொருள். இங்கே 'ஐ' என்பது தலைவன் என்ற பொருளில் திருவள்ளுவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பட்டினத்தார் தனக்கு நஞ்சு கலந்த சோறு தரப்பட்டபோது முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்று பாடினார். முன் ஐ இட்ட தீ முப்புரத்திலே என்றால் முன்பு இறைவன் வைத்த நெருப்பு மூன்று புரங்களை எரிப்பதற்காக என்று பொருளாகும்.

பாற்கடலைக் கடைந்த போது முதலில் தோன்றியவள் மூதேவி. அவளின் பின்பு தோன்றியவள் இலக்குமி. அவள் சீதையாகப் பிறந்து இராவணனால் சிறையெடுக்கப் பட்ட போது அவளைத் தேடிப் போன அநுமனின் வாலிலே தீ வைத்தான் இராவணன். அந்தத் தீயைக் கொண்டு அநுமன் இலங்கை முழுவதும் பாய்ந்து தீ மூட்டினான் என்று சொல்லும் கம்பராமாயணம். அது அநுமன் வைத்த நெருப்பு அல்ல அவன் மூலமாக திருமகள் ஆகிய சீதை வைத்த கற்பின் நெருப்பு என்பான் விபீடனன்.

'கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?
(கம்பராமாயணம் - யுத்த காண்ணடம் - மந்திரப்படலம்)'

அண்ணா! ஒரு குரங்கினால் இலங்கைக்குத் தீவைக்க முடியுமா? வைத்தாலும் தீ பிடிக்குமா? பிடித்தாலும் எரிந்து இவ்வளவு நாசம் வருமா? சானகியின் கற்பினால் வெந்து போன எங்கள் நாட்டைத் திரும்பத் திரும்ப குரங்கு சுட்டது என்று சொல்லிக் கொண்டிருக்காதே என்பது இதன் பொருளாகும்.

அதனால் தான் பட்டினத்தார் பின் ஐ இட்ட தீ தென் இலங்கையில் என்றார். இதை உணராத ஒரு பகுதித் தமிழுலகம் இன்றும் பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்ற தொடருக்கு பின்னொரு காலத்திலே வைக்கப்பட்ட தீ தெற்கு இலங்கையில் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இங்கே 'ஐ' என்பது தெய்வங்களைக் குறிக்கும் சொல்லாக வந்து விடுகின்றது.

இனித் தொல்காப்பியர் 'ஐ' என்ற எழுத்தை பெரியவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளதைப் பார்ப்போம். சங்க கால காதல் ஒழுக்கங்களிலே தவறுகள் தலைகாட்ட முற்பட்ட போது பெரியவர்கள் அதைச் சீர் செய்வதற்காக சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்கள் என்று சொல்ல வந்த தொல்காப்பியர்

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
(தொல்காப்பியம் - பொருளதிகாரம் - கற்பியல்)'

என்று சொல்லிவிட்டுப் போனார். இதைக் கூட காதல் வாழ்விலே பிரச்சனைகள் ஏற்பட்ட போது பிராமணக் குருக்கள்மார் திருமணச் சடங்குகளை உருவாக்கினர் என்று தொல்காப்பியர் சொன்னதாக அடம்பிடிக்கும் தமிழ் அறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர்த்து நோக்கினால் காதலித்து நெருங்கிப் பழகியவர்கள் தாம் அப்படிச் செய்யவில்லை என்று மறுத்து சில இன்னல்களை ஒருவருக்கொருவர் செய்து பொய்யும் தவறுமாக நடக்க முயன்ற போது அதை மாற்றியமைக்க பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வகுத்தனர் என்ற கொள்வதே பொருத்தமாகும்.

எனவே 'ஐ' என்ற எழுத்து 'ஐ' என்ற சொல்லாகிப் பயன்பட்ட காலம் போய் வெறும் எழுத்தாக மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றது. வருங்காலத்தில் எழுத்தாகவாவது நிலைக்குமா என்பது தெரியவில்லை. கணினி விசைப் பலகையில் 'ஐ' என்பதை அய் என்று எழுதினால் என்ன என்று சிந்திக்கின்றார்கள். ஆம்! சிந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள்...

-படித்ததில் பிடித்தது. அகரம் பார்த்திபன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் ஊடாக பகிர்ந்து கொண்டார்-

நாலு கோடி பாடல்கள் !

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.(ஒளவையார் தனிப் பாடல்:42)

இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.




1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.

நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாதே!
விரும்பி உண்ணச் சொல்லாதவரின் வீட்டில் உண்ணாதே! - என்பவை எதிர்மறை ஆகும்.

நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்!
சொன்ன சொல் தவறாமல் வாழ்! -  என்பவை  உடன்பாட்டுப் பொருள் ஆகும்.

-படித்ததில் பிடித்தது. அகரம் பார்த்திபன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் ஊடாக பகிர்ந்து கொண்டார்- 

முயற்சி செய்!

ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும். ஒருநாள் திடீரென்று "இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?'' என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.




ஒருநாள் அந்தக் கழுகு "இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது. உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, "இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல். "உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது. மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்'' என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது. மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது. "நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது. "என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?'' என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது. "குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது'' என்றது அந்தக் குரல். கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் , "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?" என்று கேட்டது கழுகு. இறைவன் பதிலளித்தார். "குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்? கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது. அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது. தெய்வ நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும். ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது . முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை. உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை.

முயற்சி திருவினையாக்கும்...

-படித்ததில் பிடித்தது. தோழர் முனீஸ்வரன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொண்டது. நன்றி-

Saturday 21 October 2017

டுவிட்டர் @sigaramco - 01

டுவிட்டரில் நாம் கண்ட சில சிறந்த கீச்சுக்களின் (டுவீட்டுக்களின்) தொகுப்பு:

சப்பாணி @manipmp : விடுமுறைக்குப் பின் செல்லும் அலுவலகம் தொலைதூரம் நகர்ந்திருக்கும்

ரஹீம் கஸாலி @rahimgazali : மக்களின்  வசதிக்காக ஏற்படுத்தப்பட்டதெல்லாம் மக்கள் விரோதத்தைத்தான் கடைபிடிக்குது. அது அரசாங்கமானாலும் சரி, வங்கியானாலும் சரி.




அனு @anu_twees : ஒரே ஒரு விறகு அடுப்புல சமையல் செய்து சூடு பறக்க ஊதி சாப்டது போய் ஒரே நாளில் சமையல் செய்து குளிர் சாதனத்தில் வைத்து சூடு செய்து சாப்டுறோம்

அர்ஜுன் @Arjundreams7 : நேரத்தை விரயம் செய்யும் ஏதோ ஒன்றில் மூழ்கிகிடப்பதுதான் நிம்மதி என்றாகிவிட்டது

வாழை.வை.சு.பா @kalpbagya32 : கிடைத்த வாழ்க்கையை அனுபவித்து வாழ தெரியாமல் கிடைக்காத வாழ்க்கைக்கு ஏங்கியே சாவதுதான் இன்றைய நவநாகரீகம்

நாராயணன் ராமசுப்பு ‏ @Nunmathiyon : தனக்கான பாதை இதுவல்ல என்று ஒருவர் தீர்மானித்து முடிக்கும் போது பாதி தூரம் கடக்கப்பட்டிருக்கும்.

சி.சரவண கார்த்திகேயன் @writercsk : நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை அவருக்கே விளக்க வேண்டிய‌ நிலை வரவே கூடாது.


Friday 20 October 2017

இலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகிஸ்தான் அபார வெற்றி!

Match Details:
 
Venue : Sharjah Cricket Stadium
 
Series : Sri Lanka tour of United Arab Emirates and Pakistan 2017/18
 
Toss : Sri Lanka , elected to bat first
 
Series result : Pakistan led the 5-match series 4-0
 
Player of the match : Babar Azam
 
Match number : ODI no. 3927
 
Match days : 20 October 2017 - day/night match (50-over match)




Score Card :

SRI LANKA - TOTAL 173/10 (43.4 ov) - Run Rate 3.96

Niroshan Dickwella - 22 - c Fakhar Zaman b Junaid Khan 

Upul Tharanga (C) - 0 - b Usman Khan 

Dinesh Chandimal -16 - run out ((sub)Ahmed Shehzad/Sarfraz) 

Lahiru Thirimanne - 62 - c Babar Azam b Imad Wasim

Sadeera Samarawickrama - 0 - b Imad Wasim 

Milinda Siriwardana - 13 - c Usman Khan b Hasan Ali 

Seekkuge Prasanna - 05 - b Shadab Khan

Thisara Perera - 0 - c Babar Azam b Shadab Khan

Akila Dananjaya - 18 - c Sarfraz b Hasan Ali 

Suranga Lakmal - (not out) 23*

Lahiru Gamage - 01 - b Hasan Ali 


PAKISTAN - Total 177/3 - (39.0 ov) - Run Rate 4.54
 
Imam-ul-Haq - 02


Fakhar Zaman - 17


Babar Azam - not out 69*


Mohammad Hafeez - 9

Shoaib Malik - not out 69*


Match Result : Pakistan won by 7 Wickets!


இலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகிஸ்தான் அபார வெற்றி!

Popular Posts