Tuesday 22 August 2017

காதல் உரைப்பாயோ?

⁠⁠⁠நீலாம்பல் கரையில்
நிலா ஒளியின் நடுவில்
நின்னை நோக்கினேன்

பார் அலர் அனைத்து  அழற்சி கொள்ளும்
கார் குழல் வருடும் வதனம்

ஆயிரம் வாரணம் எதிர்த்து நின்றும்
அஞ்சா என் ஆண்மை
அன்னம் இவள் பூவிழி கண்டு
அடங்குவது எனோ



முல்லை கொடி நீ
மூரல் சிந்திட மாரி
முகில் வளர்த்து மகிழ்ந்தேன்

பெண்மயிலே பூங்குழலே
பேதை நெஞ்சை
அறிவாயோ

கண்மணியே கவிமொழியாய்
காதல் உரைப்பாயோ


- இக்கவிதை கவிஞர் கெளதம் யுவா அவர்களின் படைப்பாகும் -

No comments:

Post a Comment

Popular Posts