மழலை பருவமும் மறுமுறை
வருமா? மனதை நெருடிடும்
வலிகளும் ரணமா? மகிழ்வாய்
இருந்திடல் தகுமா? ஆண்
பிறப்பே சுமைகளின் வலியா?
அப்பா தரும் பத்துக்
காசுக்காக சட்டைப் பையை
பார்ப்பதும்,அம்மா தரும்
காலணா வுக்காக கடுகு
சாடியைப் பார்ப்ப திலும்
சுகம்தான் எத்தனை யெத்தனை...
வாடகை மிதிவண்டி எடுத்து
சறுக்கலில் தனியாய் ஓட்டி
நண்பனும் உடன் வர
பறவையாய் பறந்ததும் வரமா!
பால்ய பருவமும் ஓடி
காளை பருவமும் சுகமே!
கல்லூரி நாளையேங்குது மனமே-
கன்னியின் கைவளை யேற்றிய
போதை கணத்தில் மாறியதோ
எந்தன் சந்தோச பாதை!
வேருடன் பிடுங்கி வீதியில்
விட்டார்-வேலை வேண்டி
தெருவினில் அழைந்தேன்-மாலை
தந்து மன்னவன் என்றார்!
மங்கை தாய்மை பெற்று
தகப்பன் என்ற ழைத்தார்!
ஓடியோடி உழைக் கின்றேன்!
மனம் சோர்வு நீங்க
சிரிக்கின்றேன் போட்டிகள் நிறைந்த
உலகில் உண்ணவும் நேரமில்லை!
உள்ளம் சுயமாய் எண்ணவும்
தோன்ற வில்லை-அப்பா
என்னைப் போல்தான் நீயும்,
எத்தனை வலிகள் மறைத்தாயோ
நாளும் உறவென்ற வஞ்சகத்தில்
திளைத் தாயோ அப்பா!
இப்படியொரு நிலைவரு மென்று
தெரிந்திருந்தால் கருவிலே நானும்
இருந்தி ருப்பேன்! அம்மா!
கருத்தரித்த வுடனேசிதைந் திருப்பேன்!
- இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
வருமா? மனதை நெருடிடும்
வலிகளும் ரணமா? மகிழ்வாய்
இருந்திடல் தகுமா? ஆண்
பிறப்பே சுமைகளின் வலியா?
அப்பா தரும் பத்துக்
காசுக்காக சட்டைப் பையை
பார்ப்பதும்,அம்மா தரும்
காலணா வுக்காக கடுகு
சாடியைப் பார்ப்ப திலும்
சுகம்தான் எத்தனை யெத்தனை...
வாடகை மிதிவண்டி எடுத்து
சறுக்கலில் தனியாய் ஓட்டி
நண்பனும் உடன் வர
பறவையாய் பறந்ததும் வரமா!
பால்ய பருவமும் ஓடி
காளை பருவமும் சுகமே!
கல்லூரி நாளையேங்குது மனமே-
கன்னியின் கைவளை யேற்றிய
போதை கணத்தில் மாறியதோ
எந்தன் சந்தோச பாதை!
வேருடன் பிடுங்கி வீதியில்
விட்டார்-வேலை வேண்டி
தெருவினில் அழைந்தேன்-மாலை
தந்து மன்னவன் என்றார்!
மங்கை தாய்மை பெற்று
தகப்பன் என்ற ழைத்தார்!
ஓடியோடி உழைக் கின்றேன்!
மனம் சோர்வு நீங்க
சிரிக்கின்றேன் போட்டிகள் நிறைந்த
உலகில் உண்ணவும் நேரமில்லை!
உள்ளம் சுயமாய் எண்ணவும்
தோன்ற வில்லை-அப்பா
என்னைப் போல்தான் நீயும்,
எத்தனை வலிகள் மறைத்தாயோ
நாளும் உறவென்ற வஞ்சகத்தில்
திளைத் தாயோ அப்பா!
இப்படியொரு நிலைவரு மென்று
தெரிந்திருந்தால் கருவிலே நானும்
இருந்தி ருப்பேன்! அம்மா!
கருத்தரித்த வுடனேசிதைந் திருப்பேன்!
- இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
No comments:
Post a Comment