அரும்பாக நானிருந்தால்
மலராக நீ!
கனியாக நானிருந்தால்
விதையாக நீ!
விழியாக நானிருந்தால்
இமையாக நீ!
உடலாக நானிருந்தால்
உதிரமாய் நீ!
மொழியாக நானிருந்தால்
தமிழாக நீ!
கவியாக நானிருந்தால்
வரியாக நீ!
என் சிந்தையிலே தோன்றுகின்ற எண்ணமென நீ!
நான் சிரிக்கையிலே உதிக்கின்ற இன்பமென நீ!
வானவில்லாய் நானிருக்க
வண்ணமென நீ!
காரிருளாய் நானிருக்க
வெண்ணிலவாய் நீ
வாடி நிற்கும் பொழுதினிலே
தோள்கொடுக்கும் நட்பென நீ!
நாடி நிற்கும் வேளையில் நம்பிக்கையாய் நீ!
தனித்திருக்கும் நாட்களிலே உறவெனவே நீ!
சோர்ந்திருக்கும் கணத்தினிலே உரமெனவே நீ!
ஏழையென வாடுகையில் பயிரெனவே நீ!
என் நிஜத்தில் என்றென்றும் உயிரெனவே நீ!
-இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
மலராக நீ!
கனியாக நானிருந்தால்
விதையாக நீ!
விழியாக நானிருந்தால்
இமையாக நீ!
உடலாக நானிருந்தால்
உதிரமாய் நீ!
மொழியாக நானிருந்தால்
தமிழாக நீ!
கவியாக நானிருந்தால்
வரியாக நீ!
என் சிந்தையிலே தோன்றுகின்ற எண்ணமென நீ!
நான் சிரிக்கையிலே உதிக்கின்ற இன்பமென நீ!
வானவில்லாய் நானிருக்க
வண்ணமென நீ!
காரிருளாய் நானிருக்க
வெண்ணிலவாய் நீ
வாடி நிற்கும் பொழுதினிலே
தோள்கொடுக்கும் நட்பென நீ!
நாடி நிற்கும் வேளையில் நம்பிக்கையாய் நீ!
தனித்திருக்கும் நாட்களிலே உறவெனவே நீ!
சோர்ந்திருக்கும் கணத்தினிலே உரமெனவே நீ!
ஏழையென வாடுகையில் பயிரெனவே நீ!
என் நிஜத்தில் என்றென்றும் உயிரெனவே நீ!
-இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
No comments:
Post a Comment