Showing posts with label உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018. Show all posts
Showing posts with label உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018. Show all posts

Monday, 12 February 2018

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - பங்கேற்பாளர் கட்டணம்

முதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இந்தியா, தமிழகம், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் அறிவியல் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதன்படி தற்போது மாநாட்டில் பங்குகொள்ள விரும்பும் பங்கேற்பாளர்களுக்கான கட்டண விவரங்கள் மாநாட்டுக் குழுவினரால் வெளியிடப் பட்டுள்ளன.



மாநாட்டில் பங்கு கொள்ள விரும்பும் தமிழார்வலர்கள் கால தாமதமின்றி கட்டணத்தைச் செலுத்தி தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். இறுதிநேர வருகைப்பதிவுகள் மாநாட்டுக் குழுவினருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். ஆகவே உங்கள் வருகையை உரிய நேரத்தில் உறுதி செய்யுங்கள்.

கட்டணவிவரம்:

மாநாடு நுழைவுக் கட்டணம் (இரண்டு நாட்கள்) : ரூ 300.

கல்லூரி வளாகத்தில் இரவு தங்க: ரூ 150.

மொத்தம் ரூ 450. (முதல் நாள் மதிய உணவு, இரவு தங்கல். மறுநாள் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு). வரும் பிப்25 திகதிக்குள் கட்டணத்தை கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தி விபரம் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யவும்.

வேண்டுகோள்: ஒவ்வொருவரும் குறைந்தது இருவரையாவது இணைத்து வந்தால் நலம்.

ACCOUNT : SSM TAMIL MARABU ARAKKATTALAI
ACC.NO : 087600101151401
BANK : CORPORATION BANK
BRANCH : KOMARAPALAYAM
IFSC CODE : CORP 0000876
MICR CODE : 638017004
என்ற வங்கிக் கணக்கிலோ அல்லது SSM TAMIL MARABU ARAKKATTALAI என்ற பெயரில் குமார பாளையத்தில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாகவோ அல்லது பண அஞ்சலிலோ (MONEY ORDER) அனுப்பலாம்.

கட்டணங்கள் அனைத்தும் இந்திய ரூபா மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாம் நாள் நிகழ்வாக தமிழரின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் போட்டி இடம்பெற உள்ளதால் அதனையும் கண்டு களிக்கத் தவற வேண்டாம்!
#050
உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - பங்கேற்பாளர் கட்டணம் 
https://www.sigaram.co/preview.php?n_id=279&code=Ul38w7Ng 
தகவல் : உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018  
#சிகரம் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAM #SIGARAMCO #WORLDTAMILHERITAGECONFERENCE2018   #WTHC2018
#சிகரம்  

Sunday, 11 February 2018

முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு

உலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது . பல்வேறு உலக நாடுகளிலிருந்து அறிஞர்கள் பங்குபெற உள்ளனர் . உலகளாவிய அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளையும் எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையமும், தமிழக அரசு நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “தமிழும் தமிழர் தம்வாழ்வியலும்“ என்ற பொருண்மையில் நடத்தும் இந்த மாநாடு உலக அளவில் நடைபெறும் முதல் உலகத் மரபு மாநாடு ஆகும்.

தமிழின் வாழ்வியல் கூறுகளையும், தமிழர் வாழ்வியல் நெறிகளையும் உலக அளவில் கொண்டு செல்வதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் தொல்லியல், பண்பாட்டியல், மொழியியல், சமூகவியல் மற்றும் இறையியல் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தலைப்புகளில் தமிழின் சிறப்புகள் குறித்து பல்வேறு அறிஞர் பெருமக்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.



மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கரங்களில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சிறப்பு விருந்தினர்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள் ஆகியோர் வழிமொழிய வழங்கப்பட உள்ளது.

விழாவில் தமிழக துணைமுதல்வர் மாண்புமிகு ஒ.பன்னீர் செல்வம், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி, தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா. பாண்டியராஜன், சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு கருப்பண்ணன், சமூகநலத்துறை அமைச்சர் மாண்புமிகு சரோஜா ஆகியோர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக வரும் மார்ச் 01 (01.03.2018) அன்று காலை 10 மணியளவில் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வி.ஜி.பி உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவரும் தொழிலதிபருமான முனைவர் வி.ஜி.பி சந்தோசம் அவர்களால் வழங்கப்படும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையினை மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் திறந்து வைக்கிறார். தொடர்ந்து மூலிகைக் கண்காட்சியையும் இலவச சித்த மருத்துவ முகாமையும் திறந்து வைக்கிறார்.

மாநாட்டு சிறப்பு மலரினையும் மூன்று தொகுதிகள் அடங்கிய ஆய்வுக் கோவை புத்தகங்களையும் மாண்புமிகு தமிழக முதல்வர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

கௌரவ விருந்தினராக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செல்வகுமார் சின்னையன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுந்தரம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர்.பாஸ்கரன், வி.ஜி.பி. உலகத் தமிழ் பண்பாட்டு அமைப்பின் தலைவரும் தொழில் அதிபருமான வி.ஜி.பி. சந்தோசம், வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் முனைவர். விஸ்வநாதன் , மற்றும் ஈரோடு , நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.




தமிழகத்தின் மிகப்பெரிய தமிழ் ஆளுமைகள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மேனாள் தமிழக சட்டப் பேரவைத் தலைவரும் பத்திரிக்கை ஆசிரியருமான முனைவர். செ.கு.தமிழரசன், திருமதி ஜெயந்தி கண்ணப்பன், குறள் மலை திரு ரவிகுமார், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் விஜயராகவன், திருமூலர் இருக்கை நிறுவுனர் முனைவர் மகாலட்சுமி, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன், கோவை கௌமார மடாலய பீடாதிபதி, பேரூர் ஆதீனம், ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் வெளிநாட்டைச் சார்ந்த பல்வேறு முக்கியப் பேச்சாளர்களும் ஆய்வாளர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள்.

நிறைவு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் மகாதேவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ஜெர்மனி, தென் ஆபிரிக்கா, இந்தோனேசியா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சீன நாட்டிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களும், பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைச்சர் பெருமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

மார்ச் 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் இலவச சித்த வைத்திய முகாமும், மூலிகைக் கண்காட்சியும், புத்தகக் கண்காட்சியும் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய சித்த வைத்தியர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சித்த வைத்திய முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சிக்கு மாநில சித்த மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் கே.எம். ராஜம் அவர்களும், மாநில சித்த மருத்துவ சங்க ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருள் நாகலிங்கம் ஆகியோரும் செயலாற்றி வருகின்றனர்.

மார்ச் 3 ம் தேதி நம்ம குமாரபாளையம் அமைப்பின் சார்பாக தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) மிகச் சிறந்த முறையில் நடைபெற உள்ளது.

மாநாட்டிற்காக வருகை தரும் ஆய்வாளர்களுக்கு தமிழகத்தின் மிக முக்கிய தொன்மை வாய்ந்த நகரங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழமுதம் பருக,
அனைவரும் வருக!

நன்றி!

முனைவர். மதிவாணன்
தலைவர்
எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனங்கள்
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு.

முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு - சிகரம் 

#சிகரம் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAM #SIGARAMCO #WTHC2018 
#WORLDTAMILHERITAGECONFERENCE2018   

Saturday, 10 February 2018

முதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்

முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு – 2018 இந்தியா, தமிழகம், குமாரபாளையத்தில் 2018 மார்ச் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. அதற்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. தற்போது மாநாட்டு நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக ஏறு தழுவுதல் நடைபெற ஆவண செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்


முதல் நாள் 01.03. 2018
(வியாழக்கிழமை)

காலை 10.00 மணி - திருவள்ளுவர் சிலை சிறப்பு விருந்தினர்களால் திறந்து வைக்கப்படும்
காலை 10.10 மணி - மூலிகைக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, இலவச சித்த மருத்துவ முகாம் ஆகியவற்றை திறந்து வைத்தல்
காலை 10.20 மணி - மாநாட்டு தொடக்க விழா
மதியம் 12.15 மணி - சிறப்பு சொற்பொழிவுகள்
மதியம் 01.30 முதல் 02.30 வரை உணவு இடைவேளை
பிற்பகல் 02.30 மணி – அமர்வு -1- பண்பாட்டியல் அமர்வு
(கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரங்கம்)
மாலை 04.00 மணி - அமர்வு –2– தொல்லியல் அமர்வு
(மயிலை சீனி வேங்கடசாமி அரங்கம்)
மாலை 05.30 மணி - தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள்
(எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்)
மாலை 06.30 மணி - குமாரபாளையத்தில் தமிழ் பாரம்பரிய விழா



இரண்டாம் நாள் 02.03.2018 (வெள்ளிக்கிழமை)

காலை – 09.30 மணி - சிறப்பு சொற்பொழிவு
காலை – 11.30 மணி - அமர்வு – 3 – இறையியல் அமர்வு
(வள்ளலார் அரங்கம்)
மதியம் – 01.30 – 02.30 மதிய உணவு இடைவேளை
பிற்பகல் – 02.30 மணி அமர்வு – 4 – சமூகவியல் அமர்வு
(அயோத்திதாசர் அரங்கம்)
மாலை 03.30 மணி - அமர்வு – 5 – மொழியியல் அமர்வு
(புலவர் குழந்தை அரங்கம்)
மாலை 04.30 மணி - நிறைவுவிழா - சிறப்பு சொற்பொழிவுகள்



மூன்றாம் நாள் 03.03.2018 (சனிக்கிழமை)

காலை - 10 மணி முதல் - நம்ம குமாரபாளையம் அமைப்பு நடத்தும் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டான "ஏறுதழுவல்" (ஜல்லிக்கட்டு) நடைபெறும்.

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 இன் உத்தியோகப்பற்றற்ற இணைய ஊடகப் பங்காளராக ஆரம்பம் முதல் செயற்பட்டு வரும் 'சிகரம்' இணையத்தளம் மாநாடு தொடர்பில் கிடைக்கப்பெறும் செய்திகளை உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறது. தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

#சிகரம் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAM #SIGARAMCO #WORLDTAMILHERITAGECONFERENCE2018

முதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்  - சிகரம் 


Friday, 5 January 2018

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல்

உலகத் தமிழ் மரபு மாநாடு மிகச்சிறந்த முறையில் உருவாகி வருகிறது. உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்கள் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். எஸ்.எஸ்.எம். தமிழ் மரபு மையம், உலக அளவில் இயங்கிவரும் தமிழ் அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடைபெறும் இந்த மாநாட்டில் "தமிழ் மொழியும் தமிழர் தம் வாழ்வியலும்" என்ற பொருண்மையில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட உள்ளது.
 
 
 
தமிழின் தொன்மைகளை உலகெங்கும் கொண்டு செல்ல இந்த மாநாடு உதவும் என்றே நம்புகிறோம். உங்கள் அனைவரின் வருகை மற்றும் பங்களிப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைத்து அறிஞர் பெருமக்களும் வருகை தர உள்ளனர். 

ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வு நூல் வெளியிடப் பட உள்ளது. ஆய்வுக்கோவைக்காக கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாளாக ஜனவரி 15,16ல் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு கீழ்க்கண்ட முகவரியை பயன்படுத்துக.

நன்றி
உலக தமிழ் மரபு மாநாட்டுக் குழு.

தொடர்புக்கு:
மின்னஞ்சல்



தமிழ் ஆர்வம் கொண்ட அனைவரும் பங்கேற்கலாம். ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கலாம். நண்பர்கள் பகிரலாம். தலைப்புகள் அவரவர் விருப்பம். ஒரே நிபந்தனை அவை தமிழ் மரபு மற்றும் தொன்மம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

ஆய்வுக்கட்டுரை அனுப்பும் ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும் (இந்தியா) கட்டணம் ரூபாய் - 1000 மட்டுமே.

கட்டணத்தைபின்வருமாறு வைப்பிலிடலாம்.

ACCOUNT : SSM TAMIL MARABU ARAKKATTALAI
ACC.NO : 087600101151401
BANK : CORPORATION BANK
BRANCH : KOMARAPALAYAM
IFSC CODE : CORP 0000876
MICR CODE : 638017004
என்ற வங்கிக் கணக்கிலோ, SSM TAMIL MARABU ARAKKATTALAI என்ற பெயரில் குமார பாளையத்தில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாகவோ அல்லது பண அஞ்சலிலோ ( MONEY ORDER ) அனுப்பலாம்.

கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு மிகாமல் பாமினி அல்லது UNICODE எழுத்துருவில் worldtamilheritageconference18@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஜனவரி 16க்குள் அனுப்பி வைக்கவும்.

 

Wednesday, 6 December 2017

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018





உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 குமாரபாளையம், தமிழ்நாடு, இந்தியாவில் மார்ச் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. மாநாடு தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். மாநாட்டில் பங்குபற்ற, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்பும் தமிழார்வலர்கள் 'சிகரம்' இணையத்தளத்தை தொடர்புகொள்ளுங்கள். மேலதிக விவரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்!


Popular Posts