Saturday 31 March 2018

சிகரம் வலைப்பூங்கா - 01

வணக்கம் நண்பர்களே! தமிழ் இணைய உலகில் ஆயிரமாயிரம் அருமையான தமிழ்ப் பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் எங்கள் கண்ணில் பட்ட சில நல்ல பதிவுகளை சிகரம் வலைப்பூங்காவில் தொகுத்து வழங்க எண்ணியுள்ளோம். உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

'சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி' என்னும் மகுட வாசகத்தைத் தாங்கி படைப்புகளை வழங்கி வருகிறது 'ஒரு ஊழியனின் குரல்' வலைத்தளம். அந்த வலையில் இருந்து இன்று நம் வாசிப்புக்கு தீனி போடப் போவது 'சமரசம்' சிறுகதை.



நம் வாழ்க்கையில் நாம் பல விடயங்களுக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் சில நேரங்களில் சமரசங்களால் ஆனதாகவே மாறி விடுகிறது. அப்படி ஒரு நாதஸ்வர கலைஞர் சமரசம் செய்து கொள்ள வேண்டியேற்படும் சூழலை அற்புதமாக தனது கதையில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை - சமரசம்.

'எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோர்த்தபடி' பயணித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவு தான் நமது 'முத்துச்சரம்' வலைப்பதிவு. வலைப்பதிவர் ராமலக்ஷ்மி தான் எடுத்த உழைக்கும் சாமானியர்களின் படங்களை 'காற்றோடு போனது... - டெகன்  ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்' என்னும் பதிவினூடாக நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். நீங்களும் அந்தப் புகைப்படங்களை ஒருமுறை பார்வையிடலாமே?

வலைத்தளங்களில் நமக்கு உதவி தேவையெனில் உடன் ஞாபகத்துக்கு வருபவர் 'பிளாக்கர் நண்பன்' அப்துல் பாசித். அண்மையில் கூகிள் நிறுவனம் தனது ஆட்சென்ஸ் சேவையை தமிழ் இணையத்தளங்களுக்கும் வழங்க முன்வந்ததை அடுத்து அது சம்பந்தமான முக்கியமான பதிவுகளை நண்பர் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவை உங்களுக்காக இதோ:'தமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்' மற்றும் 'ஆட்சென்ஸில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?' உள்ளிட்ட நிறைய பதிவுகள் இங்கே இருக்கின்றன. நீங்களும் படித்துப் பயன் பெறுங்கள்.

இது அறிமுகப் பதிவு என்பதால் சில பதிவுகளை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறோம். அடுத்தடுத்த பதிவுகளில் உங்கள் மனம் கவர்ந்த ஏராளமான வலைப்பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறோம். நீங்களும் உங்கள் மனம் கவர்ந்த பதிவுகளை சிறு குறிப்புடன் எமக்கு அனுப்பி வையுங்கள். sigaramco@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் எழுத்துக்களைத் தட்டி விடுங்கள். அல்லது இது போன்ற தொகுப்புக்களை நீங்களும் உங்கள் வலைப்பதிவுகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். வாசிப்பு பெருகட்டும்! 

#085/2018
2018/03/31
சிகரம் வலைப்பூங்கா - 01    
https://www.sigaram.co/preview.php?n_id=311&code=cuwfqMoK  
பதிவு : சிகரம்
#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading 
#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா 
#சிகரம்

#085/2018
2018/03/31
சிகரம் வலைப்பூங்கா - 01    
https://newsigaram.blogspot.com/2018/03/SIGARAM-VALAIP-POONGAA-01.html     
பதிவு : சிகரம்
#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading 
#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா 
#சிகரம்

Thursday 29 March 2018

கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO

அதிகாரம் 65
சொல்வன்மை 

*****

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து
ஓம்பல் சொல்லின்கண் சோர்வு 
(குறள் 642)

*****

நன்றும் தீதும்
நாக்கே செய்யும்!

****

பேசவே
தெரியு மென்று
பெருந்திமிர்
கொண்டு நாமும்
தேவையே
இல்லாப் பேச்சுத்
தினம் பேசித்
திரிதல் நன்றோ?

செல்கின்ற
இடத்தி லெல்லாம்
அறிமுகம்
இல்லாப் போதும்
பிறரிடம்
வலிந்து சென்று
பேசியே
கொல்லல் நன்றோ?




யாரையோ
பற்றி நாமும்
ஓரிடம்
சொன்ன வார்த்தை
தீயினைப்
போல் வளர்ந்து
தேடியே
நமைய ழிக்கும்!

பழமதை
நறுக்கக் கத்தி
பயன்படும்
நன்மை செய்யும்
கொலைசெய்ய
அந்தக் கத்தி
முனைந்திடின்
குற்றம் தானே?

நன்மையும்
தீமையாவும்
நாக்கினால்
வருவ தாலே
கவனமாய்
இருக்கச் சொல்லி
கருத்துநூல்
எழுதி வைத்தான்!

****

காத்துஓம்பல் - பிழைவராது காத்துக் கொள்ளுதல்.

சோர்வு - குற்றம்.

*****

மானம்பாடி புண்ணியமூர்த்தி.
20.02.2018.

#084/2018/SigaramCO
2018/03/29
கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO    

https://www.sigaram.co/preview.php?n_id=310&code=XKQJNUBq 
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்



#084/2018/SigarambharathiLK
2018/03/29
கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO    

https://newsigaram.blogspot.com/2018/03/KAVIK-KURAL-14-NANDRUM-THEEDHUM-NAKKE-SEIYUM.html      
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்


Wednesday 28 March 2018

வாழ்தலின் பொருட்டு - 04





இன்று போலவேதான் அன்றைக்கும் 
என்னை முழுதாய் நனைத்தாய்...!
உதடுவழி உயிர் நீர் தந்து 
உயிர்ப்பித்தாய் என் பெண்மையை!

கொஞ்சம் தடுமாறுகையில் கரங்களை வலுவூட்டி தாவி எனை அணைத்தாய்! மலை மீது நின்ற படி உரசிய காற்றையும் உன்னையும் எனக்குள் அனுமதித்தபோது நான் ஈன்றிருந்தேன் உன்னால் கருவுற்று பல கவிக்குழந்தைகளை!

திகட்டத் திகட்ட நீ பொழிந்த தேகமுத்தத்தில் முழுதும் நனைந்தபின் குளிரத் தொடங்கியிருந்தது! உருகிக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சட்டென கரம் உதறி விலகிப் போய்விடுவாய்!

எனது மொத்தக் காதலையும் தொப்பலாய் நனைத்து பிழிந்தெடுத்தபின்னும் நீ மிச்சம் வைத்துப் போவதுதான் தீரா நோயாகிறது!

மறுநாளே காய்ச்சலில் விழும் எனக்கு கடும் எதிர்ப்பு வரும் உன்னை சந்திக்காதேயென...! மாட்டேன் எனச் சொல்வதெல்லாம் நீ மீண்டும் எப்போது வருவாய் என்பதை அறிந்திராததால் தான் ...!

நீ வந்தால் போதும் வந்துவிடுவேன் உன்னுள் நனைந்து என்னை உயிர்பித்துக் கொள்ள உயிர் மாமழையே!

உடனே வா தேநீரோடு காத்திருக்கிறேன்!

முடிந்து போன ஒரு நாள் என்பது
எதுவெனச் சொல்ல இயலாது...
ஏதோ ஒன்றின் துவக்கமாகலாம்,
ஏதோ ஒன்றின் முடிவுமாகலாம்...!

காலச்சக்கரத்தை
நொடிநொடியாய் தகர்த்து
புறவாசல் விரட்டியடித்து
மூச்சை இழுத்துவிடுகையில்,

அசதியில் தூக்கம் வர
கண்விழித்தால் மீண்டும் 
வாசல்படியோரம் கையசைத்து
வந்து நிற்கும் அடுத்தொரு நாளும்...!

சிறகுவெட்டப்பட்ட எனக்கு 
பரிசளிக்கப்பட்ட நந்தவனம்
நான்கு சுவர்களுக்குள்
மணத்துக் கிடக்கிறது...

அசைவற்றுக் காத்திருக்கையில் அதிசயத்தின் ஓர் நாளாகவும்... அவஸ்தைகளில் தவித்திருக்கையில் நகராத நாளாகவும் தன்னைத் தின்னக் கொடுக்கும் என் நாளே...!

சுழலும் உன் சக்கரம் நிறுத்தி என் சுவருக்குள் வந்தமர்ந்து போ... கால்களற்ற என் கடிகாரத்தை சற்று மட்டும் பின்னோக்கி வைக்கிறேன்...

என் பிரியமான நாளே,
நீ அருந்தத் தேநீர் தயாரிக்கிறேன் கசந்துபோன
உன் கணங்களைத் தித்திப்பாக்க கடிந்து கொள்ளாமல்
அருந்திப் போ, என்னோடமர்ந்து இன்றைக்கும் ஓரு கோப்பை தேநீர்...!

வாழ்தலின் பொருட்டு - 04 - 01

வாழ்தலின் பொருட்டு - 04 - 02

#083/2018/SigaramCO
2018/03/28
வாழ்தலின் பொருட்டு - 04   
https://www.sigaram.co/preview.php?n_id=309&code=JQpHy2s4  
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்
 
#083/2018/SigarmbharathiLK
2018/03/28
வாழ்தலின் பொருட்டு - 04   
https://newsigaram.blogspot.com/2018/03/VAAZHDHALIN-PORUTTU-04.html   
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்
 

Sunday 25 March 2018

காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...

சாத்திரமும் ஆத்திரமும் 
காலத்திற்கு தடையில்லை,
கோத்திரங்கள் தேவையில்லை 
சேத்திரத்தில் லாபமில்லை!

காற்றிருந்திடவே தூற்றிடணும் 
வாலிபவயதில் உழைச்சிடணும்,
காலம்நேரம் பார்த்திடாமல் 
நாளும்பொழுதும் முயன்றிடணும்!

அயரும்நொடியில் ஆயிரமாய் 
அதிசயமாகுது பூவுலகம், இமைத்திடும் 
நொடியும் இழப்புகள்கோடி கண்டே
நகருது இவ்வுலகம்!



சமைத்திடக்கூட நேரமின்றி 
விரைவுஉணவகம் தேடுகின்றோம்,
சாத்திரம்பேசும் சிலமனிதர் 
பொழுதைவீணே இழக்கின்றார்!

படித்திடும்போதும் உழைத்திடணும் 
படுக்கையில்தூங்க மறுத்திடணும்,
நடந்திடும்போதே தூங்கிடணும் 
நாளுமுழைத்தே வாழ்ந்திடணும்!

பூனை கண்களை மூடிக்கொண்டால் 
பூகோளம்இருண்டிட போவதில்லை!
காலமும்நேரமும் காத்திருக்க 
கடவுளாயினும் பயனில்லை!

வேலைநேரம் பார்ப்பார்கள் 
வீணாய்பொழுதைக் கழிப்பவர்கள்,
காலம்நேரம் பார்ப்பதில்லை 
கடமையே கண்ணாய் இருப்பவர்கள்!

இந்நொடியென்பது உனதாகும் 
மறுநொடியாருக்கும் நிலையில்லை,
இக்கணமேசெயலை முடித்துவிடு 
மறுமுறையென்பதை மறந்துவிடு!

காலம்நேரம் யாருக்கும் 
காத்திருக்கவும் போவதில்லை,
வாழும்நாளை வளமாக்க 
உழைத்திடுநாளும் விரைவாக!

#கவின்மொழிவர்மன்
 
#082/2018/SIGARAMCO
2018/03/25
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... 

https://www.sigaram.co/preview.php?n_id=308&code=9oIHiKgQ
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்


#082/2018/SigarambharathiLK
2018/03/25
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... 

https://newsigaram.blogspot.com/2018/03/KAALANGAL-YAARUKKAAGAVUM-KAATHTHIRUPPATHILLAI.html   
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்

 

சிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018

வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

#071
2018.02.18
பதிவு : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
 #சிகரம்  

#073   
2018/03/04
கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!    
https://www.sigaram.co/preview.php?n_id=299&code=uifxqTC3  
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி   
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்   


#074 
2018/03/05
எழுவாய் தமிழே!  
https://www.sigaram.co/preview.php?n_id=300&code=HKV1kXgh 
பதிவர் : கவின்மொழிவர்மன் 
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM 
#சிகரம்  



#075/2018
05/03/2018
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்   


#076/2018
2018/03/09
23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்   
https://www.sigaram.co/preview.php?n_id=302&code=FovLTXny
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்செய்திகள் #சிகரம்விளையாட்டு #விளையாட்டுமஞ்சரி #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #GOOGLE #GOOGLEDOODLE #WinterOlympics #Pyeongchang2018 
#சிகரம் 

#077/2018
என்னோடு நான் 
https://www.sigaram.co/preview.php?n_id=303&code=abTNjpnJ
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #என்னோடுநான் #வாழ்க்கை #sigarambharathi #life #MewithMe #SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  
#சிகரம்  

#078/2018
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்! 
https://www.sigaram.co/preview.php?n_id=304&code=gmFQ91xR
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #travel #experience 
#SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  
#சிகரம்   

#079/2018 
2018/03/22
சிகரம் டுவிட்டர் - 01 
https://www.sigaram.co/preview.php?n_id=305&code=cpsjuH3h 
பதிவு : சிகரம் 
#சிகரம் #டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER 
#சிகரம்  

#080/2018
2018/03/24
கவிக்குறள் - 0013 - துணையே பகையானால்? 
https://www.sigaram.co/preview.php?n_id=306&code=BfT3Ys1y
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்  


சிகரம் இணையத்தளத்தின் அண்மைய அலெக்ஸா மதிப்பெண்களின் நிலை பற்றிப் பார்ப்போம்.

முதலாவது தரவரிசை:
04/01/2018 - 12,513,910

இறுதி தரவரிசை: 
25/02/2018 - 9,682,379
26/02/2018 - 9,672,182
27/02/2018 - 9,672,766
28/02/2018 - 9,684,746
01/03/2018 - 9,679,429
02/03/2018 - 9,679,429
03/03/2018 - 10,134,198
04/03/2018 - 10,142,135
05/03/2018 - 10,140,661
06/03/2018 - 10,123,816
07/03/2018 - 10,121,361
08/03/2018 - 10,122,467
09/03/2018 - 11,858,578
10/03/2018 - 10,316,821
11/03/2018 - 10,326,507
12/03/2018 - 10,327,486
13/03/2018 - 10,315,569
25/03/2018 - 10,378,754



இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்   

சிகரம் இணையத்தள அறிவிப்பு:
சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளுக்கு அப்படைப்பினை எழுதியவரே பொறுப்பாவார். படைப்பாளி சிகரம் இணையத்தளத்திற்கு வேறு தளங்களில் வெளியான படைப்பை தன் சுய விருப்பின் பேரில் வழங்கலாம். அது அவரது பொறுப்பாகும். சிகரம் இணையத்தளம் தானாக ஒரு படைப்பாளியின் படைப்பை வேறு தளங்களில் இருந்து எடுத்துப் பதிவிட்டால் அது பற்றிய முழுமையான குறிப்புகளை பதிவுடன் இணைத்து வழங்கும். படைப்பாளி முதன்முதலில் தான் சிகரம் இணையத்தளத்திற்கு வழங்கிய படைப்பை சிகரம் இணையத்தளத்தின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சிகரம் இணையத்தளத்தில் குறித்த படைப்பு வெளியிடப்பட்டமைக்கான குறிப்பை இணைத்து வெளியிட முடியும்.

சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளில் இணைக்கப்படும் மூன்றாம் தரப்பு புகைப்படங்களுக்கு சிகரம் இணையத்தளம் ஒரு போதும் உரிமை கொண்டாட மாட்டாது. சிகரம் இணையத்தள படைப்புகளை சிறப்புற வெளியிடும் நோக்கத்துக்காக மட்டுமே மூன்றாம் தரப்பு புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாம் தரப்பு புகைப்பட உரிமையாளர்கள் அல்லது இணையத்தளங்களுக்கு எமது நன்றிகள்.

https://www.sigaram.co/index.php | sigaramco@gmail.com | editor@sigaram.co

-சிகரம்


Popular Posts