Thursday 11 January 2018

கவிக்குறள் - 0003 - காக்கும் கருவி!

அதிகாரம் 43 - அறிவுடைமை

                                       *******

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்அழிக்க லாகா அரண் (குறள் 421)

******

காக்கும் கருவி !

*******



பசியினால்
சாகாவண்ணம்
பயன்படும்
உணவைப்போன்று
குளிரினில்
நடுங்காவண்ணம்
தடைசெயும்
உடையைப்போன்று,

வீதியில்
உறங்காவண்ணம்
வீடது
காத்தல்போன்று
வெய்யிலும்
மழையும்தாங்கக்
கையினில்
குடையைப்போன்று,

படைமுக
வீரர்கையில்
பயன்படும்
கேடயம்போல்
தடைகளை
உடைத்துவெல்ல
தன்மதி
ஒன்றேபோதும்,

மனிதர்க்கு
வாழ்வில்தோன்றும்
மாபெரும்
பகைகள்வெல்ல
மனிதரின்
மண்டைஉள்ள
மதியினால்
ஆகுமென்றான்,

பகைவர்கள்
நெருங்கிநம்மை
பதைப்புறச்
செய்யும்முன்னே
அறிவெனும்
ஆயுதத்தால்
அவரைநீர்
வெல்கஎன்றான் !
 

***

அற்றம்--கேடு,
செறுவார்--பகைவர்,
அரண்--பாதுகாப்பு.
 

***

மானம்பாடி புண்ணியமூர்த்தி.
30. 12. 2017.


கவிக்குறள் - 0003 - காக்கும் கருவி - சிகரம் 

No comments:

Post a Comment

Popular Posts