இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 06வதும் இறுதியான போட்டியிலும் வெற்றி பெற்று 5-1 என இந்திய அணி கைப்பற்றிக் கொண்டது. இன்று (2018.02.18) இந்திய நேரப்படி மாலை 06 மணிக்கு இடம்பெறவுள்ளது. இப்போட்டி தொடர்பான சில குறிப்புகள் இதோ உங்களுக்காக:
* இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு இ-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்னும் சாதனையைப் படைக்க இன்னும் 44 ஓட்டங்கள் தேவை. முதலிரு இடங்களில் பிரண்டன் மெக்கலம் மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோர் உள்ளனர்.
* தென்னாபிரிக்க அணி தான் விளையாடியுள்ள 100 இ-20 போட்டிகளில் 59 இல் வெற்றியும் 40 இல் தோல்வியும் பெற்றுள்ளது.
* நீண்ட காலத்திற்குப் பின்னர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக களமிறங்குகிறார்.
* இன்றைய போட்டி நடைபெறவுள்ள ஜொஹனஸ்பர்க், வொண்டரர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுள்ள இறுதி நான்கு இ-20 போட்டிகளிலும் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது.
* இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இறுதி ஐந்து இ-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளைப் பெற்றுள்ளன.
* இன்றைய போட்டி 652வது சர்வதேச இ-20 போட்டி ஆகும்.
* இந்திய அணி தான் விளையாடிய இறுதி 05 இ-20 போட்டிகளில் 04 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன் தென்னாபிரிக்க அணி தான் விளையாடிய இறுதி 05 இ-20 போட்டிகளில் 03 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
* தற்போது சர்வதேச இ-20 போட்டி தரப்படுத்தலில் இந்திய அணி மூன்றாமிடத்திலும் தென்னாபிரிக்க அணி ஆறாமிடத்திலும் உள்ளன.
* இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றினால் இந்திய அணி இரண்டாமிடத்திற்கு முன்னேறும். தென்னாபிரிக்க அணி 3-0 என கைப்பற்றினால் நான்காமிடத்திற்கு முன்னேறும்.
#062
2018.02.18
ஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்குமா?
https://www.sigaram.co/preview.php?n_id=289&code=oPiYzj3t
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #T20I #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS
#சிகரம்

No comments:
Post a Comment