Thursday 8 February 2018

மாறாதது

தை முதல் நாள் தான் தமிழ்ப் 
புத்தாண்டு என்கிறது ஒரு கூட்டம்...

சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் 
புத்தாண்டு என்கிறது ஒரு கூட்டம்...

தீபாவளி வாழ்த்து 
என்கிறது ஒரு கூட்டம்...

டீவாளி வாழ்த்து 
என்கிறது ஒரு கூட்டம்...



சாதிகள் இல்லை 
என்கிறது ஒரு கூட்டம்...

சாதிகள் உண்டு 
என்கிறது ஒரு கூட்டம்...

தமிழ்ப்பள்ளிதான் எனது 
தேர்வு என்கிறது ஒரு கூட்டம்...

வேற்றுமொழிப் பள்ளிதான் எனது 
தேர்வு என்கிறது ஒரு கூட்டம்...

தமிழில்தான் பெயர் வைப்போம் 
என்கிறது ஒரு கூட்டம்...

சமஸ்கிருதத்தில்தான் பெயர் 
வைப்போம் என்கிறது ஒரு கூட்டம்...

ஒற்றுமை என்பதில் கொஞ்சமும் 
இல்லை இவனுக்கு நாட்டம்...

வேற்றுமையில்தான் அதிக ஏற்றம்...

அடுத்த இனத்தான் அறவே மதிக்காத 
போதும் அடங்கவில்லை இவனின் 
ஆட்டம்...

-சந்திரா குப்பன்

#SIGARAMCO #SIGARAM #SIGARAMPOEMS #சிகரம் #சிகரம்கவிதைகள் #கவிதை 

#சிகரம் 

#038
2018.02.08
மாறாதது    
http://sigaram.co/preview.php?n_id=268&code=hfgk5FZA  
பதிவர் : சந்திரா குப்பன்
#SIGARAMCO #SIGARAM #SIGARAMPOEMS #சிகரம் #சிகரம்கவிதைகள் #கவிதை
#சிகரம்  

No comments:

Post a Comment

Popular Posts