இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று (2018.02.13) இடம்பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களைப் பெற்றது.
ரோகித் ஷர்மா 115 ஓட்டங்களையும் ஷிக்கார் தவான் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் எங்கிடி 04 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
275 என்னும் ஓட்ட இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களுக்குள் சுருண்டது. ஹாசிம் அம்லா 71 ஓட்டங்களையும் கிளாசின் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 04 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்திய அணி 73 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் 04-01 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது. ஆறாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி யாருக்கு? காத்திருங்கள்...
2018.02.15
ஐந்தாவது ஒருநாள் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
https://www.sigaram.co/preview.php?n_id=282&code=nySxlk3Y
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #ODI #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS
#சிகரம்
No comments:
Post a Comment