Monday 12 February 2018

பேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்!

பேஸ்புக் காலத்துக்குக் காலம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் பேஸ்புக்கில் விருப்பக் குறியீடு (Like) மட்டுமே இருந்தது. அண்மையில் மகிழ்ச்சி, கோபம், அழுகை, ஆச்சரியம் மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.



இதனைத் தொடர்ந்து தற்போது Downvote குறியீடு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. Dislike குறியீடாக இது அமையாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Downvote குறியீடானது அமெரிக்க பேஸ்புக் பாவனையாளர்கள் ஒரு சிலருடன் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இக்குறியீடு ஏனைய பேஸ்புக் பாவனையாளர்களுக்குத் தெரியாத வகையில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுப் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படும் பதிவுகள் அல்லது கருத்துக்களில் காணப்படும் எதிர்மறையான விடயங்களைப் புகாரளிக்க இவ்வசதி பயன்படக் கூடும் என அறியப்படுகிறது.

பரிசோதனை நிலையில் உள்ள இந்த வசதி அனைத்துப் பயனர்களுக்கும் எப்போது வழங்கப்படும் என பேஸ்புக் உத்தியோகபூர்வமாக எந்தவித தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#049
2018.02.12
பேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்!  
https://www.sigaram.co/preview.php?n_id=278&code=IXbhuoEU    
பதிவு : சிகரம் 
#சிகரம் #பேஸ்புக் #SIGARAM #SIGARAMCO #fb #fbdownvote #SigaramTech #சிகரம்தொழிநுட்பம் 
#சிகரம் 

No comments:

Post a Comment

Popular Posts