தென்னாபிரிக்காவுக்கெதிரான
மூன்றாவது இருபது-20 போட்டியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தைத் தன்
வசப்படுத்தியுள்ளது இந்திய அணி. 655வது போட்டியாக நேற்று (பிப் 24) கேப்
டவுன், நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது இந்தியா மற்றும்
தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபது-20 போட்டி
இடம்பெற்றது.
நாணய
சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது
இந்தியா. ஷிக்கார் தவான் 47 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா 43 ஓட்டங்களையும்
பெற்றுக்கொண்டனர். கார்ல் ஜூனியர் தாலா மூன்று விக்கெட்டுக்களைக்
கைப்பற்றிக்கொண்டார்.
தென்னாபிரிக்க
அணியால் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை
மட்டுமே பெற முடிந்தது. டுமினி 55 ஓட்டங்களையும் ஜோன்கர் 49 ஓட்டங்களையும்
பெற்றனர். புவனேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டார்.
இந்திய
அணி ஏழு ஓட்டங்களால் வெற்றி பெற்று இருபது-20 தொடரை 2-1 என்னும்
அடிப்படையில் கைப்பற்றிக்கொண்டது. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னாவும் தொடரின்
நாயகனாக புவனேஷ்வர் குமாரும் தெரிவாகினர்.
தென்னாபிரிக்காவுக்கு
கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1
கணக்கிலும் இருபது-20 தொடரை கைப்பற்றிக்கொள்ள தென்னாபிரிக்க அணி டெஸ்ட்
தொடரை 2-1 கணக்கில் கைப்பற்றியது. இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு
இருபது-20 தொடரை இந்தியா கைப்பற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
#069/2018
2018/02/25
இ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா!
https://www.sigaram.co/preview.php?n_id=296&code=9cLer4G2
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #T20I #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS
#சிகரம்
#069/2018
2018/02/25
இ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா!
https://www.sigaram.co/preview.php?n_id=296&code=9cLer4G2
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #T20I #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS
#சிகரம்
No comments:
Post a Comment