Wednesday 7 February 2018

கவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்!

அதிகாரம் 59
ஒற்றாடல் 

****

கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும் 
உகாஅமை வல்லதே ஒற்று (குறள் 585)

****

துப்பறியும் திறன்!

****

இன்றைக்கு
நமது நாட்டில்
எத்தனை
வகையாய்க் காவல்
துப்புகள்
துலக்கும் காவல்
இன்றல்ல
அன்றே உண்டு,

மன்னவன்
செங்கோல் தங்க
மக்களின்
அமைதி காக்க
நாட்டினில்
நடக்கும் செய்கை
நல்ஒற்றர்
அறிதல் வேண்டும்,



ஒற்றினைத்
தொழிலாய்க் கொண்டு
உலவுவோர்
தோற்றம் மாற்றி
யாருமே
அறியா வண்ணம்
இருத்தலே
வேண்டு மென்றான்,

கடமையை
உயிராய்ப் போற்றி
கண்துஞ்சாப்
பணிகள் செய்து
உலவியே
பல இடத்தில்
உள்ளதை
அறிதல் ஒற்றாம்,

கள்வர்கள்
கயவர் தம்மைக்
கண்டுமே
பிடிப்ப தற்கு
ஒற்றர்கள்
உதவ வென்று
ஒளிமிகும்
குறளு ரைத்தான்!

*****

கடாஉருவம் - மற்றவர் அறியமுடியாது மாறுவேடம் அணிதல் .

கண் அஞ்சாது - எவருக்கும் பயப்படாமல் துணிந்து .

யாண்டும் - எந்தஇடத்திலும் .

உகாமை - தமக்குத் தெரிந்த உண்மையை உரியவரைத் தவிற வேறுஎவரிடமும் வெளியிடாது .

****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
06.02.2018.

*

பெற்றதம் பிள்ளைப்பற்றி
பெருமையாய்ப் பேசல்விட்டு
மற்றவர் மதிக்குமாறு
மாண்புற வளர்ப்பீர்தாயே !

***

மனம்நிறை அன்புடன் ...
வணக்கமும் வாழ்த்துகளும் !

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை 
#சிகரம்  

கவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்! - சிகரம் 
 

No comments:

Post a Comment

Popular Posts