இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. துடுப்பாட்டத்திற்கு அதிக சாதகத்தன்மையை ஆடுகளம் வழங்கியதால் போட்டி வெற்றி தோலிவியற்ற முடிவை நோக்கி நகர்ந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது பங்களாதேஷ் அணி. பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 129.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலளித்தாடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 199.3 ஓவர்களுக்கு முகம் கொடுத்து 09 விக்கெட் இழப்புக்கு 713 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 200 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுக்கொண்டு தனது ஆட்டத்தை இலங்கை அணி இடைநிறுத்திக் கொண்டது.
தனது இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய பங்களாதேஷ் அணி நான்காம் நாள் ஆட்ட முடிவில் 26.5 ஓவர்களுக்கு 03 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஐந்தாம் நாளில் மேலதிகமாக 73.1 ஓவர்களைச் சந்தித்து இரண்டு விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களைப் பெற்றது. மொத்தமாக தனது இரண்டாம் இன்னிங்ஸில் 100 ஓவர்களைச் சந்தித்து 05 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஐந்தாம் நாளில் 26.5 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் தேநீர்ப் போசன இடைவேளைக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்ட போது இரு அணித் தலைவர்களும் கலந்துரையாடியதன் பேரில் வெற்றி தோல்வியற்ற முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி 08 ஆம் திகதி வியாழனன்று டாக்காவில் இடம்பெறவுள்ளது.
#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS
No comments:
Post a Comment