திருக்குறள்
அதிகாரம் 61
மடி இன்மை
****
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள் 605)
*****
ஓட்டைகள் நிறைந்த ஓடம்!
*****
சரியான
நேரந்தன்னில்
முறையாகச்
செய்தல் விட்டு
பிறகேதான்
செய்வோம் என்று
பெரிதாகச்
சோம்பல் கொள்வோர் ,
நினைவினில்
உறுதி யின்றி
மறதியில்
மூழ்கி நிற்போர்
சோம்பலை
மடியில் கட்டி
சுமந்துமே
முடங்கிப் போவோர் ,
பகலிலும்
இரவைப் போன்று
படுத்துமே
உறக்கம் கொண்டு
ஒன்றுமே
நினைவில் லாமல்
உறக்கமே
உயிரென் போர்கள் ,
ஓட்டைகள்
பலவும் உள்ள
ஓடத்தைத்
தேர்ந் தெடுத்து
அக்கரை
செல்லு தற்கு
ஆசையும்
பட்டாற் போன்றாம் ,
காலத்தை
வீணாக் காது
காரிருள்
மனங் கொள்ளாது
வாழ்வினை
வகுப்போர் தானே
வையத்தில்
உயர்வா ரென்றான்!
****
நெடுநீர் - காலம்தாழ்த்துதல் .
மறவி - கடமைகளை மறந்துபோதல் ,
மடி - சோம்பேறித்தனம் .
துயில் - அளவுக்குமீறிய தூக்கம் .
கெடுநீரார் - அழிவினை விரும்புகின்றவர் .
காமக்கலன் - விரும்பி பயணம் செய்யும் ஓடம்.
****
மானம்பாடி புண்ணியமூர்த்தி.
10.02.2018.
#060
2018.02.18
கவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்!
https://www.sigaram.co/preview.php?n_id=288&code=LxWjHoAD
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
அதிகாரம் 61
மடி இன்மை
****
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள் 605)
*****
ஓட்டைகள் நிறைந்த ஓடம்!
*****
சரியான
நேரந்தன்னில்
முறையாகச்
செய்தல் விட்டு
பிறகேதான்
செய்வோம் என்று
பெரிதாகச்
சோம்பல் கொள்வோர் ,
நினைவினில்
உறுதி யின்றி
மறதியில்
மூழ்கி நிற்போர்
சோம்பலை
மடியில் கட்டி
சுமந்துமே
முடங்கிப் போவோர் ,
பகலிலும்
இரவைப் போன்று
படுத்துமே
உறக்கம் கொண்டு
ஒன்றுமே
நினைவில் லாமல்
உறக்கமே
உயிரென் போர்கள் ,
ஓட்டைகள்
பலவும் உள்ள
ஓடத்தைத்
தேர்ந் தெடுத்து
அக்கரை
செல்லு தற்கு
ஆசையும்
பட்டாற் போன்றாம் ,
காலத்தை
வீணாக் காது
காரிருள்
மனங் கொள்ளாது
வாழ்வினை
வகுப்போர் தானே
வையத்தில்
உயர்வா ரென்றான்!
****
நெடுநீர் - காலம்தாழ்த்துதல் .
மறவி - கடமைகளை மறந்துபோதல் ,
மடி - சோம்பேறித்தனம் .
துயில் - அளவுக்குமீறிய தூக்கம் .
கெடுநீரார் - அழிவினை விரும்புகின்றவர் .
காமக்கலன் - விரும்பி பயணம் செய்யும் ஓடம்.
****
மானம்பாடி புண்ணியமூர்த்தி.
10.02.2018.
#060
2018.02.18
கவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்!
https://www.sigaram.co/preview.php?n_id=288&code=LxWjHoAD
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
No comments:
Post a Comment