டுவிட்டரில் நாம் கண்ட சில சிறந்த கீச்சுக்களின் (டுவீட்டுக்களின்) தொகுப்பு:
சப்பாணி @manipmp : விடுமுறைக்குப் பின் செல்லும் அலுவலகம் தொலைதூரம் நகர்ந்திருக்கும்
ரஹீம் கஸாலி @rahimgazali : மக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டதெல்லாம் மக்கள் விரோதத்தைத்தான் கடைபிடிக்குது. அது அரசாங்கமானாலும் சரி, வங்கியானாலும் சரி.
அனு @anu_twees : ஒரே ஒரு விறகு அடுப்புல சமையல் செய்து சூடு பறக்க ஊதி சாப்டது போய் ஒரே நாளில் சமையல் செய்து குளிர் சாதனத்தில் வைத்து சூடு செய்து சாப்டுறோம்
அர்ஜுன் @Arjundreams7 : நேரத்தை விரயம் செய்யும் ஏதோ ஒன்றில் மூழ்கிகிடப்பதுதான் நிம்மதி என்றாகிவிட்டது
வாழை.வை.சு.பா @kalpbagya32 : கிடைத்த வாழ்க்கையை அனுபவித்து வாழ தெரியாமல் கிடைக்காத வாழ்க்கைக்கு ஏங்கியே சாவதுதான் இன்றைய நவநாகரீகம்
நாராயணன் ராமசுப்பு @Nunmathiyon : தனக்கான பாதை இதுவல்ல என்று ஒருவர் தீர்மானித்து முடிக்கும் போது பாதி தூரம் கடக்கப்பட்டிருக்கும்.
சி.சரவண கார்த்திகேயன் @writercsk : நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை அவருக்கே விளக்க வேண்டிய நிலை வரவே கூடாது.
சி.சரவண கார்த்திகேயன் @writercsk : நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை அவருக்கே விளக்க வேண்டிய நிலை வரவே கூடாது.
No comments:
Post a Comment