Saturday 7 October 2017

அப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு!

இப்போது இலங்கையில் நடக்கும் நல்லாட்சி அப்பம் தந்த அருள்வாக்கினால் வந்தது. அதாவது நமது மகிந்தருடன் மைத்திரி ஐயா அப்பம் சாப்பிட்ட போது உண்டான ஞானத்தினாலேயே புதிய 'மக்கள் விரும்பும் நல்லாட்சி' உருவானது. இந்த நல்லாட்சியில் கடந்த காலங்களில் சில விலைக் குறைப்புகளும் பல விலை அதிகரிப்புகளும் நிகழ்ந்துள்ளன. 



இதன்படி அண்மையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன் (Cylinder) ஒன்றின் விலை 110 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அப்பம், தேநீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 



சாதாரண மக்களே இதன் மூலம் பாதிக்கப்படுவர். ஆனால் அது குறித்து அரசுக்குக் கவலை இல்லை. எல்லா விடயங்களுக்கும் மௌனம் சாதிப்பதே நல்லாட்சியின் சாதனை. இந்த ஆட்சியை விட சிவப்புத் துண்டின் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது.

ஜனாதிபதியைத் தவிர எல்லோரும் அறிக்கை விடுகிறார்கள். கூட்டுக் களவாணிகள் என்று ஒதுக்கிய ஆட்சியில் தலைவருக்கு மட்டும் ஆப்பு வைத்துவிட்டு மற்றவர்களோடு உறவாடுகிறார்கள். என்னய்யா நடக்குது இங்கே?

நவம்பர் / டிசெம்பரில் 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படும். அதில் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

No comments:

Post a Comment

Popular Posts