இருள் சூழ்ந்த
இரவை ஒளியால் நிரப்பி
துன்பமெனும் அசுரனை
தீயிட்டு எரித்து
திரியின் காந்தலில்
தீமைகளைக் கொளுத்தி
சரமான வெடிகளால்
சந்தோசத்தைக் கூட்டி
வெடிக்கும் அதிர்வில்
வேதனையை அழித்து
சிரிக்கும் மந்தாப்பாய்
சூழ்ச்சிகளை பொசுக்கி
எதிரிகளின் திட்டியை
உடைத்து புஸ்வானமாக்கி
உயர்ந்த எண்ணத்தை
உள்ளத்துள் விதைத்து
வாழ்வின் ரணங்களை
வான வேடிக்கையாக்கி
விண்ணில் பறப்போம்
விண்ணேறும் வெடியால்
சூன்யத்தை அழித்து
சுகந்தத்தைப் பரப்பி
பகைகளைக் கொளுத்தி
பண்பை வளர்த்து
மொழியைக் கடந்து
மனதைப் பார்த்து
தமிழாய் வாழ்வோம்
யாதும் ஊரே
யாவரும் கேளீரென்று
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
இரவை ஒளியால் நிரப்பி
துன்பமெனும் அசுரனை
தீயிட்டு எரித்து
திரியின் காந்தலில்
தீமைகளைக் கொளுத்தி
சரமான வெடிகளால்
சந்தோசத்தைக் கூட்டி
வெடிக்கும் அதிர்வில்
வேதனையை அழித்து
சிரிக்கும் மந்தாப்பாய்
சூழ்ச்சிகளை பொசுக்கி
எதிரிகளின் திட்டியை
உடைத்து புஸ்வானமாக்கி
உயர்ந்த எண்ணத்தை
உள்ளத்துள் விதைத்து
வாழ்வின் ரணங்களை
வான வேடிக்கையாக்கி
விண்ணில் பறப்போம்
விண்ணேறும் வெடியால்
சூன்யத்தை அழித்து
சுகந்தத்தைப் பரப்பி
பகைகளைக் கொளுத்தி
பண்பை வளர்த்து
மொழியைக் கடந்து
மனதைப் பார்த்து
தமிழாய் வாழ்வோம்
யாதும் ஊரே
யாவரும் கேளீரென்று
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
No comments:
Post a Comment