Monday 9 October 2017

என்னப் பெத்தவரே...

அப்பா!
என்ன பெத்தவரே!
விட்டுட்டுப்போயிட்டியே!
நான் பால் குடித்திடவே 
மாடு வாங்கி கட்டினியே!

என்ன சிரிக்கவச்சி ரசித்திடவே-அழுது 

வேசம் கட்டுவியே நான் அழுதழுது 
புலம்புறேனே அப்பா அசையாம 
படுத்துறுக்கியே-நான்
கதறுறது கேட்கலையா இப்படி 

கல்லாட்டம் கிடக்குறியே ஏ ராசா
என்னப் பெத்தவரே!




என்ன கைப்பிடிச்சி நடத்துனியே அப்பா 

இப்போ உதறிவிட்டு போயிட்டியே 
எங்கே போனாலும் அழைச்சிட்டு போவியே-என்
மகராசா இப்போ நீமட்டும் போயிட்டியே!

ஒருவாய் சோறு நானுண்ண 

நிலவைப் பிடிச்சி தருவீரே
உருண்டுநான் அழுதாலும் ஒரு

வார்த்தை பேசலையே என்சாமீ!

தூசு எம்மேல பட்டாக்கூட 

கலங்கித்தான் போவீங்களே ஐயா
உங்களை மண்ணுக்குள்ள வச்சிப்புட்டு 

மண்ணாகிப் போயிட்டேனே!

ஒருபொழுது ஒருநிமிசம் உட்கார்ந்து 

நானறியேன்-இப்போ
கைகாலு அசைக்காம படுத்தே 

நீங்க கிடக்குறீங்களே!

ஒருதுளி கண்ணீர்விட்டா 

ஓடிவந்து அணைப்பீங்களே ராசா-இப்படி 
ஓயாம அழுகிறேனே 
ஒருவார்த்தை கேக்கலையே!

-இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் தன் தந்தையின் மறைவையொட்டி உள்ளக்கிடக்கைகளை வார்த்தைகளால் வடித்தபோது பிறந்த காவியம்

-

No comments:

Post a Comment

Popular Posts