தற்போது இலங்கை அணி பாகிஸ்தானுக்கெதிரான கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று இருபது-20 போட்டிகள் கொண்ட தொடர் இது.
இத்தொடரில் தற்போது இரண்டு ஒரு நாள் மற்றும் மூன்று இருபது-20 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள மூன்றாவது இருபது-20 கிரிக்கெட் போட்டி தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTytU0sRZ43uGNSc9pbPUWrC1v3OS45A1vJjIlCIZcp8tMvq9ZCf28ky5e1taATjN1al1iBfgHiMiqLgG8dX2o4H_cBVHKBA-iVfKbPYSXehDHS-nkihPMsneki3hxOvPE7VQKorPkmO4f/s400/Sports+Corner.jpg)
இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க பாதுகாப்பு காரணங்கள் மற்றும் உடல்தகுதி காரணமாக பாகிஸ்தான் லாகூரில் இடம்பெறவுள்ள இருபது-20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடி வரும் அணியில் இருந்து அல்லாமல் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள போட்டிக்காக புதிய அணியைக் களமிறக்குவது தொடர்பில் லசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இன்று (20) பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள அணியில் இடம்பெறும் வீரர்களின் விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#SLvsPAK #Pakistan #Lahore #UAEtour #Malinga #SLC #PCB
லசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK
லசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK
No comments:
Post a Comment