அகரம் பார்த்திபன்:
வெயிலில் சுற்றிவந்த
களைப்பு நீங்க
நிழலில் ஒதுங்கும்போது
எறும்பென கடித்த
வார்த்தை சுருக்கென்றது...
முத்துகிருஷ்ணன்:
உதிர்கின்ற இலை கூட வடுஒன்றை விட்டுச்செல்லும்
உட்கார்ந்து இருந்த இடத்தில்...
தேசத்தின் காதல் தீதில்லை -
உன் தேசம் அவளெனும் போது...
ரவிசங்கர் பத்மநாதன்:
குங்கும பூவில் குளித்தவள்...
குவளைப் பூவாய் மலர்ந்தவள்...
ஆம்பல் பூவின் நிறமவள்...
அல்லி பூவின் மணமவள்...
குஷ்பூ என நெருங்கினால்...
குங்பூவால் சொருகினாள்...
நினைத்தபோது மலர்வேன்...
மலராய் கனிவேன்...
கனிந்தால் எழுவேன்...
நான்..
தலைப்பு....
அளவில்..
கூகை போல் குறுகி...
கருத்தில்..
ஈகையாய் கைக்கொடுப்பதால்..
நான்..
ஹைக்கூ..
வளர்ந்தால் மரம்..
உதிர்ந்தால் உரம்...
இது இறத்தலில்லா வரம்...
மனோ நிலவன்:
இறந்து இறங்கும் இலையும்
இதமாய் இருக்கிறது இதயத்திற்கு
நண்பர் கிங் :
சேர சோழ பாண்டிய நாடு இது
மூவேந்தர் வளர்த்த முத்தமிழ் நாடு.
உழுவம் இல்லா நாடு வழுவும்
உழுதல் இல்லா வாழ்வு தாழ்வு
அரவிந்த்:
காகிதம் வண்ணம் மாறுவதால்
ஏழை வயிறு நிறையவா போகிறது?
முனீஸ்வரன்:
குறளே உலக
அரங்கில் தமிழின்
குரலாய்!
தனித்த பின்னும்
தனியா தாகம்
தமிழ்
சதீஷ் விவேகா:
பிறமொழி மோகத்திலும்
அசராமல் வளர்கிறது
தமிழ்
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
தொகுப்பாளரிடம் சிக்கித் தவிக்கிறது
தமிழ்
கல்லுடன் சேர்ந்து
உடைகிறது சிறுவனின்
எதிர்காலம்
வறுமையிலும் வாடாமல்
வளர்கிறது
பெண்கல்வி
பிறமொழி மோகத்திலும்
அசராமல் வளர்கிறது
தமிழ்
கிருத்திகா:
வீழ்ந்து அனைவரையும் வீழ்த்துகிறது
நீர்வீழ்ச்சி
- இது தமிழ் கூறும் நல்லுலகம் வழங்கிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு -
No comments:
Post a Comment