இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டி அக்டோபர் 07 சனியன்று இடம்பெற்றது. அதில் இந்திய அணி டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி இன்று (அக்டோபர் 10) இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
அதிகபட்சமாக ஜாதவ் 27 ஓட்டங்களையும் பாண்டியா 25 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலளித்த அவுஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்தது. ஹென்றிக்ஸ் 62 ஓட்டங்களையும் ட்ராவிஸ் ஹெட் 48 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியால் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
தற்போது தொடர் 01-01 என்று சமப்பட்டுள்ளது. தொடர் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment