தகப்ப னுயிரும் தாய்வழி உடலும்
இரண்டு மிணைந் துருவாகிட
ஓரிடம் இறைவன் தந்தான்.
மலத்தில் தவழ்ந்து-மல நீரில்
மிதந்து எச்சம் உண்டு பிறந்திட்ட
மனிதா உயிரை சுமந்த ஊனும் பெரிதா
மண்ணில் பிறந்ததே அரிதா//
சிலநா ளுண்ண தாயு மிட்டாள்
பலநா ளுண்ண தகப்பன் அளித்தான்//
அறிவை ஆசான் அள்ளியே தந்தார்
அழகும் வனப்பும் இறைவ னிட்டார்...
உலகை யறிய பலவழி தந்தான்
உறவுக ளென்ற உதவியு மளித்தான் -
நண்பர்கள் பலவும் நயமாய் தந்தான்//
பாதைகள் நெடுகும் அனுபவம் தந்தே
பார்த்துப் பார்த்து பக்குவம் செய்தான்-வாழ்வே
பிச்சையென் றுணர்ந்திடடா மனிதா//
எத்தனை போட்டி யெத்தனை
புரட்டு வஞ்சகம் சூழ்ச்சி கொடும்பகை யேனோ//
வாழும் உயிரே யுன் தந்தை
யளித்த பிச்சையென் றுணராய்//
உயர்வுகளென்ன தாழ்வுக ளென்ன
மாற்றானென்ன உறவினனென்ன//
இறையளித்தன யாவும்
உடன்பிற வாத உறவுகள் தானே//
பிறப்பவன் யாவும் மறைபவ னன்றோ-
பிறப்பு மிறப்பும் உன் செயலன்றோ//
நினைத்த வுடனே பிறப்பது மில்லை
மரித்திட மறுத்தால் விடுவது மில்லை//
உழைப்பவன் யாவும் வளர்வ துமில்லை-உழைத்
துழைத்தே அழிந்த வனில்லை//
அறவழி வன்முறை அவனவன் பாதை-இதில்
அழிவு மாக்கமும் இறைவழிப் பாதை//
விரோதங்கள் குரோதங்கள் வீணா யேனோ//
கோபம் என்பது வீழ்ந்திடத்தானோ//
வாழும் பொழுதில் பகைமையு மேனோ
மனிதனின் வாழ்வே மகிழ்ந்திடத் தானோ//
பிறப்பது மிறப்பது ஒருமுறை தானே
வாழ்வே பிறர்க்கு உதவிடத் தானே ஏற்ற
இறக்கம் இறையிட மில்லை
அன்பு ஒன்றே முக்தியி னெல்லை...
-இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
மலத்தில் தவழ்ந்து-மல நீரில்
மிதந்து எச்சம் உண்டு பிறந்திட்ட
மனிதா உயிரை சுமந்த ஊனும் பெரிதா
மண்ணில் பிறந்ததே அரிதா//
சிலநா ளுண்ண தாயு மிட்டாள்
பலநா ளுண்ண தகப்பன் அளித்தான்//
அறிவை ஆசான் அள்ளியே தந்தார்
அழகும் வனப்பும் இறைவ னிட்டார்...
உலகை யறிய பலவழி தந்தான்
உறவுக ளென்ற உதவியு மளித்தான் -
நண்பர்கள் பலவும் நயமாய் தந்தான்//
பாதைகள் நெடுகும் அனுபவம் தந்தே
பார்த்துப் பார்த்து பக்குவம் செய்தான்-வாழ்வே
பிச்சையென் றுணர்ந்திடடா மனிதா//
எத்தனை போட்டி யெத்தனை
புரட்டு வஞ்சகம் சூழ்ச்சி கொடும்பகை யேனோ//
வாழும் உயிரே யுன் தந்தை
யளித்த பிச்சையென் றுணராய்//
உயர்வுகளென்ன தாழ்வுக ளென்ன
மாற்றானென்ன உறவினனென்ன//
இறையளித்தன யாவும்
உடன்பிற வாத உறவுகள் தானே//
பிறப்பவன் யாவும் மறைபவ னன்றோ-
பிறப்பு மிறப்பும் உன் செயலன்றோ//
நினைத்த வுடனே பிறப்பது மில்லை
மரித்திட மறுத்தால் விடுவது மில்லை//
உழைப்பவன் யாவும் வளர்வ துமில்லை-உழைத்
துழைத்தே அழிந்த வனில்லை//
அறவழி வன்முறை அவனவன் பாதை-இதில்
அழிவு மாக்கமும் இறைவழிப் பாதை//
விரோதங்கள் குரோதங்கள் வீணா யேனோ//
கோபம் என்பது வீழ்ந்திடத்தானோ//
வாழும் பொழுதில் பகைமையு மேனோ
மனிதனின் வாழ்வே மகிழ்ந்திடத் தானோ//
பிறப்பது மிறப்பது ஒருமுறை தானே
வாழ்வே பிறர்க்கு உதவிடத் தானே ஏற்ற
இறக்கம் இறையிட மில்லை
அன்பு ஒன்றே முக்தியி னெல்லை...
-இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
No comments:
Post a Comment