இலங்கை எதிர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 482 ஓட்டங்களைக் குவித்தது. இதில் கருணாரத்ன 196 ஓட்டங்களையும் சந்திமால் 62 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி தனது சிறப்பான துடுப்பாட்டத்தை முதலாவது இன்னிங்ஸில் வெளிப்படுத்தியமையே வெற்றிக்கு பிரதான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தது.

பாகிஸ்தானின் முதலாவது இன்னிங்ஸ் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. 262 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஹசார் அலி 59 ஓட்டங்களையும் சொஹெய்ல் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி யாரும் எதிர்பாராத வகையில் 96 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் வெற்றி உறுதிப்படுத்தப் பட்டதாக எண்ணினர்.
தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு 317 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சபீக் 112 ஓட்டங்களையும் சப்ராஸ் 68 ஓட்டங்களையும் [பெற்று அணிக்கு வெற்றியைத் தேடித் தர முயற்சி செய்திருந்தனர். ஆனால் முயற்சி பலனளிக்காமல் 68 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான் அணி.
இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாகக் கைப்பற்றியது. இந்திய அணியுடனான தொடரில் கண்ட தொடர் தோல்விகளுக்கு சிறந்த மருந்தாக இந்த தொடர் வெற்றி அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தனது முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் (இரண்டாவது டெஸ்ட் போட்டி) வெற்றி பெற்றுள்ளது இலங்கை அணி. இதே உற்சாகத்துடன் ஒரு நாள் போட்டியில் 13 ஆம் திகதி துவங்கும் ஒருநாள் போட்டித் தொடரிலும் இலங்கை அணி வெற்றி பெற வாழ்த்துவோம்!
#SLvPAK #TestCricket #SLTourofUAE #DNTest #Srilanka #Pakistan
#SLvPAK #TestCricket #SLTourofUAE #DNTest #Srilanka #Pakistan
No comments:
Post a Comment