இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 05 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 04-01 என்கிற அடிப்படையில் இந்திய அணியிடம் இழந்தது. தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் விளையாடி வருகிறது.
முதலாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டக்வர்த் லுவிஸ் முறையில் இந்தியாவுக்கு இலகுவான வெற்றியைத் தேடிக் கொடுத்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதன்போது மழை குறுக்கிடவே ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
நீண்ட நேரம் மழை பெய்த காரணத்தால் இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 10 விக்கெட்டுகள் கைவசமிருக்க களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 5.3 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்தது.
இந்திய அணியைப் பொறுத்தவரை பெற்ற ஓட்ட இலக்கை சுற்றி நின்று காவல் காப்பதை விடவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரட்டி வேட்டையாடுவது மிகவும் இலகுவானதும் பிடித்தமானதுமான விடயம். அதனை முதலாவது இருபது-20 போட்டியில் மீண்டும் ஒரு முறை நிரூபித்தது இந்திய அணி.
இரண்டாவது இருபது-20 போட்டி நாளை ( அக்டோபர் 10 ) இரவு 7 மணிக்கு இடம்பெறக் காத்திருக்கிறது. ஒரு நாள் போட்டியில் பெற்ற தொடர் வெற்றியை இருபது-20 தொடரிலும் தக்க வைத்துக் கொள்ளுமா இந்திய அணி? நாளை பார்க்கலாம்.
No comments:
Post a Comment