நிறைந்த வானம்...
நீர்கோர்த்த மேகம்...
நின்முகம் தேடும்
என் விழிகள்...
ஒளிந்து கொண்டாயோ
ஒளியை மறைத்து...
முகிலின் முதுகில்
முகம் மறைத்துக் கொண்டாயோ ...
சாளரத்தின் வழியே
சாலை அமைத்து
முகிலைத் துளைத்து
முழுமதியைத் தேடினேன்...
ஒளிகூட்டி பிரகாசித்தாள்
ஓங்கார முகத்தாள்...
சிரித்தேன் ... பூரித்தேன்...
சிகை கலைய குதித்தேன்...
கரம்பற்றி இழுத்தாள்..
கணநொடியில் சாய்த்தாள்...
கிறங்கடித்து மயக்கினாள்...
கண்மூடும் நேரத்தில்
அவள்மடியில் கிடத்தினாள்...
உதிரும் பூக்களாய்
சில வார்த்தைகள் மொழிந்தாள்
சுகம் கொடுத்துச் சென்றது...
காற்றினில் தேடியும்
காணாமல் போனது அவ்வார்த்தை..
கரம் கோர்த்து
கால் தடம்பதிய
வீண்மீன் காடுகளில்
விளையாடிக் களித்தோம்...
உடலின் வெப்பம்
உச்சத்தைத் தொட...
அருகே அழைத்தாள்
இதழ் முத்தம் பதித்தாள்..
பிரிந்திட மறந்து
பிரியமாய் இணைந்தது இதழும்...
கொள்ளை ஆசைகள்
கொட்டித் தீர்க்க...
இச்சைகள் தீர
இன்புற்றுக் கிடந்தோம்...
விலகியே வந்தேன்
வியாபித்தாள் என்னுள்...
விரும்பமின்றி பிரிந்தேன்
வாடிய முகத்துடன்...
இளைத்து தேய்ந்தாள்
இளமதி அவளும்...
பார்த்த கண்ணில்
பனித்துளியாய் நீர்கோர்த்திட...
ஏக்கத்துடன் விடைபெற்றேன்...
இனியொரு நாள் வருமா
நிலவுனுடன் பயணிக்க...
நித்தமும் ஏங்குகிறேன்...
ஏகமும் நிறைந்தவளே - மீண்டும்
அழைப்பாய் என்ற
ஆறுதலுடன் கடக்கிறேன்
நிலவில் ஓர் பயணத்திற்கு...
- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
நீர்கோர்த்த மேகம்...
நின்முகம் தேடும்
என் விழிகள்...
ஒளிந்து கொண்டாயோ
ஒளியை மறைத்து...
முகிலின் முதுகில்
முகம் மறைத்துக் கொண்டாயோ ...
சாளரத்தின் வழியே
சாலை அமைத்து
முகிலைத் துளைத்து
முழுமதியைத் தேடினேன்...
ஒளிகூட்டி பிரகாசித்தாள்
ஓங்கார முகத்தாள்...
சிரித்தேன் ... பூரித்தேன்...
சிகை கலைய குதித்தேன்...
கரம்பற்றி இழுத்தாள்..
கணநொடியில் சாய்த்தாள்...
கிறங்கடித்து மயக்கினாள்...
கண்மூடும் நேரத்தில்
அவள்மடியில் கிடத்தினாள்...
உதிரும் பூக்களாய்
சில வார்த்தைகள் மொழிந்தாள்
சுகம் கொடுத்துச் சென்றது...
காற்றினில் தேடியும்
காணாமல் போனது அவ்வார்த்தை..
கரம் கோர்த்து
கால் தடம்பதிய
வீண்மீன் காடுகளில்
விளையாடிக் களித்தோம்...
உடலின் வெப்பம்
உச்சத்தைத் தொட...
அருகே அழைத்தாள்
இதழ் முத்தம் பதித்தாள்..
பிரிந்திட மறந்து
பிரியமாய் இணைந்தது இதழும்...
கொள்ளை ஆசைகள்
கொட்டித் தீர்க்க...
இச்சைகள் தீர
இன்புற்றுக் கிடந்தோம்...
விலகியே வந்தேன்
வியாபித்தாள் என்னுள்...
விரும்பமின்றி பிரிந்தேன்
வாடிய முகத்துடன்...
இளைத்து தேய்ந்தாள்
இளமதி அவளும்...
பார்த்த கண்ணில்
பனித்துளியாய் நீர்கோர்த்திட...
ஏக்கத்துடன் விடைபெற்றேன்...
இனியொரு நாள் வருமா
நிலவுனுடன் பயணிக்க...
நித்தமும் ஏங்குகிறேன்...
ஏகமும் நிறைந்தவளே - மீண்டும்
அழைப்பாய் என்ற
ஆறுதலுடன் கடக்கிறேன்
நிலவில் ஓர் பயணத்திற்கு...
- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
No comments:
Post a Comment