ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை சோனியிடம் இருந்து கைப்பற்றியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்! STAR SPORTS BAGS IPL MEDIA RIGHTS FROM SONY SPORTS!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு துவங்கின. துவங்கிய நாள்முதல் இந்திய கிரிக்கெட் சபையின் காட்டில் அமோகமான பண மழை பொழிந்து வருகிறது. 2008இல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கிய போது சோனி நிறுவனம் 10436 கோடி ரூபாய்க்கு ஒன்பது ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமத்தை ஏலம் எடுத்தது. அதாவது ஆண்டுக்கு 1160 கோடி ரூபாய்கள்!
இந்த வருடத்துடன் ஒளிபரப்பு உரிமம் முடிவுக்கு வந்ததை அடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் அண்மையில் இடம்பெற்றது. இதில் சோனி நிறுவனம் 11050 கோடிக்கும் ஸ்டார் நிறுவனம் 16347 கோடிக்கும் ஏலம் கேட்டிருந்தன. சோனியை விட 5297 கோடிகளை அதிகமாகக் கொடுத்து ஒளிபரப்பு உரிமத்தை 2018 முதல் 2022 வரை தன்வசப்படுத்தியது ஸ்டார் நிறுவனம்.
அதாவது ஒரு போட்டிக்கு 55 கோடி ரூபாய் அல்லது ஒரு பந்துக்கு 23 லட்ச ரூபாய் என்கிற அடிப்படையில் ஸ்டார் நிறுவனம் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை தனதாக்கியுள்ளது. ஐ.பி.எல் லின் ஒரு தொடருக்கு 2050 கோடி ரூபாய் என்னும் அளவில் விளம்பர வருவாய் ஈட்டவுள்ளதாம் ஸ்டார் நிறுவனம்!
#IPL #IPLMEDIARIGHTS #VIVOIPL #SPNSPORTS #STARSPORTS #IPL2018 #IPLAUCTION #CSK #WHISTLEPODU #MSD #ESPN #IPLBROADCASTRIGHTS
No comments:
Post a Comment