பிக்பாஸ் பத்தாம் வாரத்தின் இறுதியில் 'சிகரம்' கணித்தபடி காஜல் பிக்பாஸ் வீட்டிலிருந்து தன் சொந்த வீட்டை நோக்கி நடையைக் கட்டினார். ஒரு வார விருந்தாளிகளாக உள்ளே நுழைந்த ஆர்த்தியும் ஜூலியும் வெளியேறுவது போல் போக்குக் காட்டிவிட்டு மீண்டும் பிக்பாஸ் ஜோதியில் ஐக்கியமாகினர். சண்டைக்கோழி என வர்ணிக்கப்பட்ட காஜல் வெளியேறிவிட்டதால் இனி நிம்மதியாக பிக்பாஸ் பார்க்கலாம். சக்தி மூன்றாவது விருந்தினராக உள்ளே வந்திருக்கிறார்.
ஆரவ்வை குண்டர்களை வைத்து தூக்கிச் செல்வதாய் ஒரு நாடகம் நடத்தினார் பிக்பாஸ். நிரந்தரமாக வீட்டை விட்டு வெளியேற நேரிடுமோ என கொஞ்சம் பயந்துவிட்டார் ஆரவ். அருமையான காதலை ஆறப்போட்ட ஆரவ் இந்தமுறை தப்பித்துவிட்டார். இனி அவரை வெளியேற்றுவது சிரமம் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது வரவுகளும் விருந்தினர்களும் நிறைந்திருக்கின்றனர். மகுடத்தை வெல்லும் வாய்ப்பு இவர்களுக்கும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. பிக்பாஸ் ஒரு சர்வதேச நிகழ்ச்சி என்பதால் முழுமையான விதிமுறைகள் யாருக்கும் தெரியாது. ஆகவே பதிலை பிக்பாஸ் தான் நமக்குச் சொல்ல வேண்டும்.
நாளை ( 03 ) பதினோராம் வாரம் துவங்குகிறது. கூடவே வெளியேற்றத்திற்கான பரிந்துரைகளும் நாளை உண்டு. விருந்தினர்களுக்கு விலக்களிக்கப்பட்டால் மகுடத்தில் அவர்களின் பெயர் இல்லை என்பது உறுதி. நாளை என்ன நடக்கும்? காத்திருங்கள்!
# BIGG-BOSS-TAMIL-WEEK-10-JULIE-HARATHI-JULIE-IN-KAAJAL-OUT
# TRIGGER-SHAKTHI-RE-ENTRY
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #KAMALHASSAN #STARVIJAY #VIVOBIGGBOSS
# BIGG-BOSS-TAMIL-WEEK-10-JULIE-HARATHI-JULIE-IN-KAAJAL-OUT
# TRIGGER-SHAKTHI-RE-ENTRY
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #KAMALHASSAN #STARVIJAY #VIVOBIGGBOSS
No comments:
Post a Comment