பிக்பாஸ் நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துள்ளது. இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ளன. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் சுவாரசியம் அதிகரித்துள்ளது. இறுதிக்கட்டப் போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கும் என பிக்பாஸ் எச்சரித்துள்ளார். தற்போது ஏழு உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டில் எஞ்சியுள்ளனர். ஆரம்பகட்ட போட்டியாளர்கள் நால்வரும் புதிய போட்டியாளர்கள் இருவரும் உள்ளனர். ஏழுபேரில் இருவர் பெண்களாவர்.
பிக்பாஸ் மாபெரும் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வாவதற்கான வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். அதுதான் 'வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு ( Winning Golden Ticket )'. இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்தத் துருப்புச் சீட்டை வெல்பவரை எதிர்வரும் வாரங்களில் வெளியேறுவதற்காக பரிந்துரை செய்யவோ வெளியேற்றவோ முடியாது. மாபெரும் இறுதிப்போட்டிக்கு நேரடித் தகுதியை இந்தத் துருப்புச் சீட்டு வழங்குகிறது.
இந்த பன்னிரெண்டாம் வாரம் முழுவதும் இதற்கான போட்டிகள் நடைபெறும். இதற்கான போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கும். பதினோராம் வாரத்தின் ஞாயிறு அத்தியாயத்தின் மூலம் கமல் இதற்கான போட்டியை ஆரம்பித்து வைத்தார். வெற்றிபெறும் நபருக்கு கமல் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து 'வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை' வழங்குவார். இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தெரிவு பெறப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? இந்த வார இறுதியில் அறிந்து கொள்வோம். அதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியுடனும் சிகரம் இணையத்தளத்துடனும் இணைந்திருங்கள்.
#BiggBoss #BiggBossTamil #BigBrother #EndamolshineGroup #StarVijayTV #KamalHassan #Oviya #OviyaArmy #Oviyaa #Namitha #Julie #Google #BiggBossVoteTamil #TN #VivoBiggBoss
No comments:
Post a Comment