ஆங்கே
வேளாளர்
தெரு தாண்டி
வேதியர்
தெருவதனின்
கோடியிலே,
அன்பான
ஆசிரியர்
வாழ்ந்திருந்தார்
!
இரைச்சல்
மிகுந்த தன்
இல்லதினோர்
மூலையில்தான்
இவர்
தம்
மாணாக்கர் படிக்கப்
பள்ளியொன்று
நடத்தி வந்தார் !
பார்வைக்குப்
பயம் தோற்றும் கண்கள் ;
படிப்பறிவைப்
பறைசாற்றும்
பரந்த
நெற்றி !
கண்டிப்பு
மிகுந்திருந்த அந்தக்
கண்களில்தான்
கருணையும்
கடலாகப் பொங்கிவரும் !
அடித்து
அழவைக்கும் அதேகரங்கள் தாம்
அரவணைத்து
அன்பூட்டும் !
அனைத்து
மாணவரும் ஆசானைப்
புரிந்தே
நடந்தனர் ! போற்றினர் !
சிரிப்புவெடி
உதிர்கின்ற அந்த
வாயிருந்து
தான்
சிந்தனைத்
தீப்பொறி பிறக்கும் !
கணக்கெழுதப்
பாங்காய் கற்பிப்பார் !
கால
நிலைகளுக்குக் கட்டியம் கூறிடுவார் !
கவியெழுதிப்
பொருள்கூறி மகிழ்விப்பார் !
உலகறிவு
ஒருசேர இணைந்திருக்கும் நிலைகண்டு
அவ்வெளிய
மக்கள்,
’அத்தனை
சிறிய தலைக்குள்ளில்
இத்தனை
அரும்பொருட் செறிவா ‘
என்று
அன்றடைந்த
வியப்புக்கு அளவில்லை !
ஆனால்
அவரது
அளவிறந்த புகழும்
அந்த
வெற்றிப் பெருமிதமும் இன்று
வெறுமைப்
புயலுக்குள் சிக்கியதே !
கடந்த
காலம் கடந்ததுதான் !
கல்விமான்
வாழ்ந்திருந்த கல்விக்கூடம்
இன்று
வெறும்
கற்கூடமாகவே
இருக்கிறது !
மூளை
செறிந்திருந்த இடத்திலின்று
முட்புதர்
தான் செறிந்திருக்கிறது !
ராகம்
பாடிவந்த குயில்கூட்டம்
குறை
கொண்டு
சோகம்
பாடி அழுகிறது !
அன்பு
சிரித்து அகமகிழ்ந்த
இடத்திலின்று
ஆணவம்
அரசாளுகிறது !
கற்பனைச்
சிறகை இன்னும்
சற்றே
விரித்துப்
பின்னோக்கிப்
பறக்கின்றேன் !
வெண்
திரைக் கடலிடையே
விளங்கும்
தீவெனவே
விரிந்த
புல்வெளியின்
இடையினிலே,
கண்
கவரும் கட்டிடம்
ஒன்றுண்டு
!
செவிக்குணவு
கொண்டாலும்
இலையென்று
சொன்னாலும்
வேண்டுபவர்
வயிற்றுக்கு
ஈயுமொரு
சிற்றுண்டிச்
சாலையது !
வெண்மைச்
சுவர் முழுதும்
விரிந்த
சித்திரங்கள் !
கதவுக்குப்
பின்னாலோர்
காலக்
காட்டி !
மணியடிக்கும்
போதெல்லாம் அதிலிருந்தோர்
மணிப்புறா
புறத்தெட்டி நமை விளிக்கும் !
மேசைப்
புறத்தெல்லாம் விழியீர்க்கும் விரிப்புகள் !
மின்விளக்கின்
இன்னொளி நம் மனமீர்க்கும்!
சுற்றுப்
புறமெங்கும் சோலைபோல் பூஞ்செடிகள் !
மாலை
நேரத்தின் மங்கியதோர் நிலவொளியில்
பானங்கள்
குடித்தும் பலகாரம் புசித்தும்
இன்புறுவர்
எல்லோரும் இவ்விடத்தில் !
நாளெல்லாம்
உழைத்துப் பாடுபடும் மக்கள்
இங்கே
கூடித்தான்
களிப்பெய்திக்
கவலை மறப்பர் !
இனியிந்த
இயக்கங்கட் கிடமில்லை !
இன்பத்தின்
இருப்பிடமாய்
இருந்துவந்த
என் கிராமம்
இனிமை
சீர்குலைந்து
கிடப்பதனைக்
காண்கையிலே,
இதயம்
இயங்க மறுக்கிறதே !
ஆம்!
எனக்கிந்த எளிமையான இன்பங்கள்
இனியோர் முறைகிடைக்கப்
போவதில்லை !
இயற்கை ஈந்துவந்த
ஆத்மார்த்த மான சில
சொர்க்க போகங்கள் இன்று
சோக கீதங்கள்
ஆகிவிட்டனவே !
பகட்டான இன்பங்கள்
இன்பங்களா என்று
என் இதயம் கேட்கிறதே !
இதற்கென்ன விடை சொல்வேன் !!
---கி. பாலாஜி
இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
கனவுகள் முற்றும்!
No comments:
Post a Comment