பிக்பாஸ் தமிழின் பன்னிரண்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டுக்கான (Golden Winning Ticket) வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இந்த வாரத்தில் இடம்பெற்ற தங்கத் துருப்புச் சீட்டுக்கான போட்டிகளின் புள்ளிப் பட்டியலின் படி சினேகன் முதலிடத்தைத் தட்டிச் சென்றார். ஆகவே சினேகன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் இறுதிப் போட்டிக்குத் தேர்வான முதல் போட்டியாளராகவும் சினேகன் மாறியுள்ளார்.
கமல் அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து நேரடியாக தங்கத் துருப்புச் சீட்டை சினேகனுக்கு வழங்கி வைத்தார். ஆரவ் இரண்டாவது இடத்தையும் பிந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கமல் போட்டியாளர்களுடன் சுவாரசியமாக உரையாடினார். இன்று வெளியேறுபவரையும் கமல் கையோடு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மேடைக்குச் சென்று தனது பணியைத் தொடர்ந்தார்.
ஆரவ், சினேகன், வையாபுரி மற்றும் ஹரிஷ் ஆகிய நால்வரே இவ்வாரத்துக்கான வெளியேறும் போட்டியில் இருந்தனர். இவர்களுள் ஹரிஷ் சனிக்கிழமை அத்தியாயத்தின் மூலம் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். சினேகன் வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றி கொண்டதன் மூலம் காப்பாற்றப்பட்டார். மீதமிருந்த இருவரில் வையாபுரி வெளியேறுபவராக அறிவிக்கப்பட்டார். ஏனைய போட்டியாளர்களைப் போலல்லாது வையாபுரிக்கான விடைபெறும் குறும்படம் வீட்டிலுள்ள அனைவரின் முன்னிலையிலும் காண்பிக்கப்பட்டது சிறப்பு.
குறும்படத்தின் போது சிறிது கண்கலங்கிய வையாபுரி அதன் பிறகு கண்ணீர் சிந்தவேயில்லை. இந்த முடிவை அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். பிக்பாஸ் வீட்டின் ஏனைய உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தினர். அவர்களைப் போலவே நாமும் வையாபுரியின் நகைச்சுவை கலாட்டாக்களை நிச்சயம் தவற விடுவோம் என்பது மட்டும் உண்மை!
#BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO
No comments:
Post a Comment