பெண் என்பவள் சக்தியாம். ஆம் மாபெரும் சக்தி அவள். என்ன இல்லை அவளிடம்? இங்கு பலரும் ஒருவரிடம் என்ன இருக்கிறது என்று தேடுவதேயில்லை. நீ அவள் போல அழகாக இல்லை, இவள் போல அறிவாக இல்லை என என்ன இல்லை என்பதை தேடியே இருப்பதை மறக்கிறோம் இருக்கும் நிம்மதியை தொலைக்கிறோம்.
இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், நான் இப்பதிவின் முக்கிய பகுதிக்கு வருகிறேன்.ஆண்கள் ஏன் பெண்ணை பலவீனமானவர்கள் என்றே சொல்கிறார்கள்? உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தன்னை விட பலமுடையவர்களாக வேறு எவரும் இருக்கக் கூடாது என்பது தான். அதிலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் குறிப்பாக ஒரு ஆண் இந்த அடிப்படை இயல்பை எவ்வாறு கையாள்கிறான் என்று உற்று நோக்குவோம். தோற்பவரோடு மட்டும் விளையாடி தான் வெற்றி பெற்றதாக கூறும் சிறுபிள்ளைகளை நாம் பார்த்திருப்போம். அதையே தான் வளர்ந்த ஆணும் செய்கிறான்.
தன்னை பலமுள்ளவன் என்று காட்ட பெண்ணை பலவீனமானவள் என அறிவித்தல் நியாயமா? எதிர்ப்பாலினம் என்ற ஒன்று மட்டும்தான் வேறுபாடு. மற்றபடி அவளும் மனித இனம் தான் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு உண்டு?
தராசுக்கு கூட சீர்தூக்கி பார்க்க அதன் இரு தட்டுகளிலும் பொருள் வேண்டும். இந்த சமூகம் மட்டும் ஏன் பெண்ணை தரையில் இட்டு சீர்தூக்கி பார்க்கிறது? பெண்ணை தனக்கு நிகராக மதிக்கும் போற்றும் என் தோழர்களுக்கும் உறவுகளுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம்.
* இது எந்த தனிப்பட்ட நபரையும் சாடும் பதிவல்ல.இது என் பார்வை அவ்வளவே.
* இது எந்த தனிப்பட்ட நபரையும் சாடும் பதிவல்ல.இது என் பார்வை அவ்வளவே.
இப்பதிவு பதிவர் கிருத்திகா அவர்களின் படைப்பாகும்.
No comments:
Post a Comment