எழுவாய் தமிழே!
தன்மையாய் முன்னிலை
வகித்து-உந்தன்
படர்க்கை விரித்திடு!
இலக்கணம் வகுக்கத்தொல்
காப்பியங்களும்
ஈரடியில்திருக் குறளும்,
நாலடியாய் பாக்களும்,
இன்பம்கொள்ள கலித் தொகையும்,
ஐந்திணை விளங்க நற்றிணையும்
சிறிதுபெரிதென குறுந்தொகையும்,
ஐங்குறுநூறாய் பதிற்றுப்பத்தாய்
ஓங்கிஒலிக்கும் பரி பாடலுடன்
அகம் புறமென விரு
நானூறு பாவகையும்,
எத்தனை யெத்தனை
ஆற்றுப்படைகள் அம்மம்மா!
சிலம்புகளில் அதிகாரமாய்,
மணிகளில் கண்டேன்
மேகலைகள் அந்த
சீவகனுக்கோ சிந் தாமணி
எவர்க்கும்
வளையா பதியாய்
காதிருக் குண்டல கேசியெனும்
ஐம்பெரும்
காப்பியங்கள் அழகழகாய்
எட்டுத்தொகை நூல்களும்
மூவாறுமேன் கணக்கு நூல்களும்
மூவாறுகீழ் கணக்கு நூட்களு மின்னும்
இயைந்ததெல்லாம் இலக்கியமாய்
இடையிடையே இலக்கணமாம்!
அறம்வளர்க்க மொருநூலும்,
அகமுரைக்க வொருநூலும்,
மறம் வளர்க்க வொருநூலு மனி
தமுரைக்க வொருநூலும்,
அடுத்த நற்கெல்லாம் இலக்கணங்கள்
அனைத்தையு முரைக்கும் இலக்கியங்கள்,
மருத்துவ மென்றால்
அதிலுண்டு மாயப் புதுமை
அறிவியல் வெகுவுண்டு,
வானிலை சாத்திரம்
உலகுரைப்போம் நாங்கள்
வாழ்நிலை பக்தியை
யதில் வளர்ப்போம்!
அணுக்களின் நகர்வை யுரைத்திடுவோம்,
அண்டங்கள் கடந்து
படர்ந்திடுவோம்!
சிறகுகள் வேண்டாம்
விரைந்திடுவோம் சிந்தனை
யதிலே பறந்திடுவோம்!
#074 2018/03/05
எழுவாய் தமிழே!
https://www.sigaram.co/preview.php?n_id=300&code=HKV1kXgh
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்...
-
தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் 'ஐ' என்ற எழுத்து ஒரு காலத்தில் 'ஐ' என்ற சொல்லாகத் தனித்து நின்...
-
உழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...
-
அதிகாரம் 43 - அறிவுடைமை ******* அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்க லாகா அரண்...
-
வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித...
-
மனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா? எங்க அந்தக் கதைய சொல்லு... ...
-
மீசை முளைக்கா பருவத்தில் ஆசை முளைத்தது அரைக்கால் சட்டையில் அரும்பியதே அக்காதல் சிவந்த அழகியவள் சீரான பல் வரிசையும் மேலுதட்டின் மேல் ...
-
வணக்கம் நண்பர்களே! இந்தப்பதிவு என் நீண்ட நெடுநாள் ஆசை. இதனைப்பற்றி விரிவாக, தெளிவாக, அழகாக பேசவேண்டும் என்பது என் விருப்பம். இனிவரும் நா...
-
ரோஜா படத்தில் காதல் ரோஜாவே பாடலை அம்மா பாடலாக மாற்றி எழுதும் போட்டியில் கலந்து அதில் வைரமுத்து அவர்களின் மகன் கபிலன் வைரமுத்து கையொப்பம் இட...

No comments:
Post a Comment