Tuesday 9 January 2018

கவிக்குறள் - 0002 - அறிவுடையோர் ஆராய்வர் !

அதிகாரம்  47 - தெரிந்து செயல்வகை .

                                                     ***

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள் 461)
                      *****

அறிவுடையோர் ஆராய்வர் !

                      ****






அருமையாம்
தொழிலி லொன்றை
ஆசையாய்த்
தொடங்கு வோர்க்கு
அறிவுரை
சொல்லு கின்றான்
அனைவரும்
கூர்ந்து கேட்போம்

இடுகின்ற
முதலீ டாய்ந்து
இழப்புகள்
எதுவென் றாய்ந்து
வருகின்ற
வருவாய் ஆய்ந்து
வழிவகை
நன்றாய் ஆய்ந்து ,

செயப்போகும்
தொழிலால் மக்கள்
பெறப்போகும்
பயனை ஆய்ந்து
தொடங்கிடும்
தொழிலே நாட்டில்
சுடர்விடும்
என்று சொன்னான் ,

தெரியாத
தொழிலில் மாட்டி
திசைமாறிப்
போவோ மானால்
அழிவென்னும்
இழப்பு வந்து
அடியோடு
சாய்க்குமென்றான் ,

எத்தொழில்
தொடங்கி னாலும்
இவையெல்லாம்
நினைவில் கொண்டு
நன்றாகச்
செய்தோ மானால்
நமக்காகும்
வெற்றி யென்றான் !
 

                          ****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
09. 01. 2018 .


கவிக்குறள் - 0002 - சிகரம் 
 

No comments:

Post a Comment

Popular Posts