அதிகாரம்.43.
அறிவு உடைமை.
*****
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
(குறள்.430.)
****
உடையது அறிவாம் !
****
அனைத்துமே
உடையாரிந்த
அவனியில்
எவரோஉள்ளார் ?
ஒன்றுமே
குறைகளில்லார்
ஒருவரும்
இல்லைதானே !
எத்தனை
வகையாய்இங்கே
இருக்கின்ற
வசதியெல்லாம்
மொத்தமாய்த்
தமதாய்க்கொண்டு
முழுமைகள்
அடைந்தாரில்லை ,
இப்பெரும்
உலகந்தன்னில்
எல்லாமே
பெற்றுவாழ்வோர்
நிச்சயம்
உள்ளாரென்று
நீதிநூல்
குறளில்சொன்னான் ,
அறிவினை
உடையாரிங்கே
அனைத்துமே
உடையாரென்று
திடமுடன்
சொல்லிநம்மைத்
தெளிவுடன்
வாழச்சொன்னான்,
அழிந்திடும்
பொருட்களெல்லாம்
நிரந்தரச்
செல்வமில்லை
உயர்வினைத்
தருவதாலே
அறிவதே
செல்வமென்றான் !
***
மானம்பாடி புண்ணியமூர்த்தி .
01. 01. 2018.
கவிக்குறள் - 0001 - சிகரம்
அறிவு உடைமை.
*****
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
(குறள்.430.)
****
உடையது அறிவாம் !
****
அனைத்துமே
உடையாரிந்த
அவனியில்
எவரோஉள்ளார் ?
ஒன்றுமே
குறைகளில்லார்
ஒருவரும்
இல்லைதானே !
எத்தனை
வகையாய்இங்கே
இருக்கின்ற
வசதியெல்லாம்
மொத்தமாய்த்
தமதாய்க்கொண்டு
முழுமைகள்
அடைந்தாரில்லை ,
இப்பெரும்
உலகந்தன்னில்
எல்லாமே
பெற்றுவாழ்வோர்
நிச்சயம்
உள்ளாரென்று
நீதிநூல்
குறளில்சொன்னான் ,
அறிவினை
உடையாரிங்கே
அனைத்துமே
உடையாரென்று
திடமுடன்
சொல்லிநம்மைத்
தெளிவுடன்
வாழச்சொன்னான்,
அழிந்திடும்
பொருட்களெல்லாம்
நிரந்தரச்
செல்வமில்லை
உயர்வினைத்
தருவதாலே
அறிவதே
செல்வமென்றான் !
***
மானம்பாடி புண்ணியமூர்த்தி .
01. 01. 2018.
கவிக்குறள் - 0001 - சிகரம்
No comments:
Post a Comment