இந்தியன் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் பதினோராம் பருவம் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி முதல் மே மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாபெரும் துவக்க விழா ஏப்ரல், ஏழாம் திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெளவுள்ளது. இரவு 7.15 மணிக்கு ஆரம்ப நிகழ்வை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடேயில் துவக்க விழா நடைபெறும். ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முதல் போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இரண்டாண்டு தடைக்குப் பின் மீண்டும் களமகறங்குகின்றன. நடுவர் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யும் முறைமை இந்த பருவ ஐ.பி.எல்-லில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இ-20 தொடருக்குப் பின் இந்த முறைமை ஐ.பி.எல்-லில் முதல் முறையாக அறிமுகப் படுத்தப் படவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய எட்டு அணிகள் இம்முறை விளையாடவுள்ளன. மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆரம்பப் போட்டி 07.04.2018 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியும் அதே மைதானத்தில் 27.05.2018 அன்று இடம்பெறவுள்ளது.
ஜ.பி.எல் பதினோராம் பருவ போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star india) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளன. ஐ.பி.எல்-லின் முதல் பத்து பருவ போட்டிகளையும் சோனி தொலைக்காட்சி (SPN Network) ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டு முதல் 2022 வரையான ஐந்து வருட காலப்பகுதிக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 16,347.5 கோடி ரூபாய்க்கு (2.55 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஏலம் எடுத்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா பெருவாரியான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. உலகின் பல்வேறு கிரிக்கெட் அணிகளையும் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது கூடுதல் உற்சாகம். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடர் குறித்த கூடுதல் தகவல்களுடன் உங்களை 'சிகரம்' தொடர்ந்தும் சந்திக்கும். காத்திருங்கள்!
#087/2018/SIGARAMCO
2018/04/03
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018
https://www.sigaram.co/preview.php?n_id=313&code=c5Gd6V2K
பதிவு : சிகரம்
#IPL #IPL2018 #VIVOIPL #CSK #MI #DD #SRH #KNR #KXIP #RCB #RR #StarSports #hotstar #MSD #WhistlePodu #MIvsCSK #ஐபிஎல் #ஐபிஎல்2018
#சிகரம்
#087/2018/SigarambharathiLK
2018/04/03
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018
https://newsigaram.blogspot.com/2018/04/IPL-2018-STARTS-AT-APRIL-07-2018.html

No comments:
Post a Comment